தேடுதல்

இந்தியப்பெருங்கடலில் இராணுவப் பயிற்சிகள் இந்தியப்பெருங்கடலில் இராணுவப் பயிற்சிகள்  (SP)

இனியது இயற்கை: இந்தியப் பெருங்கடலின் அமைப்பு

இந்தியப் பெருங்கடல், உலகின் மூன்றாவது பெரிய பெருங்கடலாகும். இது, இப்பூமியில், ஏறத்தாழ இருபது விழுக்காட்டுப் பகுதியை உள்ளடக்கியது

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்தியப் பெருங்கடல், உலகின் மூன்றாவது பெரிய பெருங்கடலாகும். இது, இப்பூமியில், ஏறத்தாழ இருபது விழுக்காட்டுப் பகுதியை உள்ளடக்கியது. இது வடக்கில் இந்தியா உட்பட ஆசியா, மேற்கில் ஆப்ரிக்கா, கிழக்கில் ஆஸ்திரேலியா, தெற்கில் அண்டார்க்டிக் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது.  பன்னாட்டு நீர் பரப்பளவு ஆய்வு அமைப்பு, இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியைப் பிரித்து அண்டார்டிக் பெருங்கடலை உருவாக்கியது. அதன் பிறகும் இந்தியப் பெருங்கடல், உலகின் ஐந்து பெருங்கடல்களில் மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாக விளங்குகிறது. ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் தெற்கு முனைகளில் இந்தியப் பெருங்கடலின் அகலம் ஏறக்குறைய பத்தாயிரம் கி.மீ ஆகும். செங்கடல் மற்றும், பாரசீக வளைகுடாவை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடலின் பரப்பளவு 7,35,56,000 ச.கி.மீ. ஆகும். இப்பெருங்கடலில், இலங்கை, மடகாஸ்கர், கொமொரோஸ், செஷெல்லெஸ், மாலத்தீவு, மொரீஷியஸ் ஆகிய ஆறு தீவு நாடுகள் உள்ளன. இந்தோனேசியா இதன் ஒரு எல்லைப்பகுதியாக விளங்குகிறது. ஆனால் 1800களின் துவக்ககாலம் வரை, எந்த நாடுகளும் இக்கடல் பகுதியில் வெற்றிகரமாக அதிகாரம் செலுத்தவில்லை. அதன்பின் இக்கடலை ஒட்டிய பெரும்பான்மை நிலப்பரப்புகளை ஆங்கிலேயர்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்பெருங்கடலில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அதிகாரம் செலுத்தி வந்தன. இந்திய பெருங்கடல் பகுதி, 24 நாடுகளை உள்ளடக்கியது. உலக கடல் பரப்பில் மூன்றில் ஒரு பங்கை, இந்திய பெருங்கடல் கொண்டுள்ளது. இந்த கடல் பரப்பு 7,517 கி.மீ. நீளம், ஒன்பது கடலோர நாடுகள், 140 கோடி டன் சரக்குகளை கையாளும் துறைமுகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. (நன்றி விக்கிப்பீடியா)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2022, 12:05