அக்டோபர் மாத இறுதியில் மியான்மார் இராணுவத்தால் தாக்கப்பட்ட மக்கள் குடியிருப்புகள் அக்டோபர் மாத இறுதியில் மியான்மார் இராணுவத்தால் தாக்கப்பட்ட மக்கள் குடியிருப்புகள் 

மனிதாபிமான உதவிகளுக்கான தடைகள் அகற்றப்பட

மியான்மார் நாட்டில் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு, வாழ்வை காக்கும் அடிப்படை உதவிகள் தேவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டில் ஆடசிக் கவிழ்ப்புக்குப்பின் இடம்பெறும் மனிதகுல நெருக்கடியால் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு, வாழ்வை காக்கும் அடிப்படை உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா. நிறுவனம் அறிவித்துள்ளது.

வன்முறைகள் அதிகரித்துவருவதால் மக்களின் வாழ்வு நிலை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உரைத்த ஐ.நா. உதவி அமைப்பின் தலைவர் Martin Griffiths அவர்கள், அண்மையில் புதிதாக 37,000 பேர் புலம்பெயர்ந்தவர்களாக மாறியுள்ளதாகவும், கோவில்கள் உட்பட 160க்கும் மேற்பட்ட கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் கவலையை வெளியிட்டார்.

மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவோர் தாக்கப்படுவது அனைத்துலகச் சட்டங்கள் வழி தடைச்செய்யப்பட்டுள்ள போதிலும், மியான்மாரில் இந்த குற்றம் தொடர்வதாகவும், 2 இலட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்களாக வாழ்வதாகவும் தெரிவித்தார் Griffiths.

மனிதாபிமான உதவிகள் அனைவரையும் சென்றடைய, மியான்மார் இராணுவம், கட்டுப்பாடுகளை அகற்றவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளார் ஐ.நா. உதவி அமைப்பின் தலைவர் Martin Griffiths. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2021, 15:13