இலங்கைத் தலைநகர் கொழும்புவில் முழு அடைப்பு இலங்கைத் தலைநகர் கொழும்புவில் முழு அடைப்பு 

தொற்று நோயைக் கட்டுப்படுத்த இலங்கையில் முழு அடைப்பு

முழு அடைப்பை அரசு அமல்படுத்த வேண்டும் என, இலங்கையின் கத்தோலிக்க, புத்த மத, மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, இலங்கை அரசு முழு அடைப்பை அமல்படுத்தியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சில வாரங்களுக்கு அந்நாட்டில் முழு கதவடைப்பை அரசு அமல்படுத்த வேண்டும் என இலங்கையின் கத்தோலிக்க, புத்த மத, மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, இலங்கை அரசு முழு அடைப்பை அமல்படுத்தியுள்ளது.

தொற்று நோய் வெகு வேகமாகப் பரவிவருகிறது, மருத்துவமனைகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறுகின்றன, மக்கள் தெருக்களில் கைவிடப்பட்டு உயிரிழக்கின்றனர் என்று இத்தலைவர்கள், இலங்கை அரசுத்தலைவருக்கும், பிரதமருக்கும் தங்கள் செய்திகளை அனுப்பியிருந்தனர்.

நலஆதரவு வல்லுனர்களின் எச்சரிக்கைக்கு செவிமடுக்காமல், உரிய நேர நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், காலதாமதம் செய்யும் இலங்கை அரசின் செய்லபாடுகள், நாட்டை படுகுழியில் தள்ளிவிடும் என மதத்தலைவர்களும், தொழிற்சங்கங்களின் தலைவர்களும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இலங்கையில் ஏற்கனவே வழிபாட்டுத் தலங்களும், கல்வி நிலையங்களும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 20 வெள்ளி நள்ளிரவு முதல் நாடு தழுவிய முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் 1 கோடியே 20 இலட்சம் பேர் இதுவரை கோவிட்-19, முதல் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 50 இலட்சம் பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2021, 14:15