புத்தரும் சீடர்களும் புத்தரும் சீடர்களும் 

விதையாகும் கதைகள்: எப்பொருளையும் வீணாக்காமல் பயன்படுத்த

ஐ.நா.வின் மனிதவள மேம்பாட்டு சுட்டெண்ணின்படி, இந்தியாவில் 41.6 விழுக்காட்டு மக்கள், ஒரு நாளைக்கு 75 ரூபாய்க்கும் குறைவான ஊதியத்தில் வாழ்கின்றனர். உலகில் 82 கோடிக்கும் மேலானோர் போதிய உணவில்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒருநாள் புத்தர் தனது ஆசிரமத்தைச் சுற்றி வந்துகொண்டிருந்தார். அப்போது அவரது சீடர் ஒருவர், ஐயனே, எனக்கு ஒரு போர்வை தரவேண்டும் என்று கேட்டார். அதற்கு புத்தர், இப்போது நீ பயன்படுத்தும் போர்வை என்ன ஆயிற்று என்று கேட்க, அது மிகவும் பழையதாகிவிட்டது, அதனை படுக்கை விரிப்பாகப் பயன்படுத்துகிறேன் என்று சொன்னார். அப்படியானால் உனது பழைய படுக்கை விரிப்பு எங்கே என்று புத்தர் கேட்க, அது பல இடங்களில் கிழிந்துவிட்டது, அதனால் அதனை தலையணை உறைகளாகத் தைத்துவிட்டேன் என்றார் சீடர். அது சரி, முன்பிருந்த தலையணை உறைகள் எங்கே என்று புத்தர் மீண்டும் கேட்க, அவை மிகவும் தேய்ந்துவிட்டன, அவற்றை காலணியாகப் பயன்படுத்துகிறேன் என்றார் சீடர். புத்தரும், சீடரிடம் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டார். பழைய காலணிகள் என்னவாயிற்று என்று கேட்க., அவை தேய்ந்து நூல் இழைகளாகவே பிரிந்துவிட்டன, எனவே அவற்றை பந்தமாகவும், மாடவிளக்குகளுக்குத் திரியாகவும் பயன்படுத்துகிறேன் என்று, சலிப்படையாமல் பதில் கூறினார் சீடர். அப்போது புத்தர், பொருள்பொதிந்த புன்னகை ஒன்றைப் புரிந்தார். புத்தர், இந்த உரையாடலில் எந்தப் பொருளையும் வீணாக்காமல் பயன்படுத்தவேண்டும் என்பதை உணர்த்தியுள்ளார். (நன்றி தினமலர்). ஐ.நா.வின் மனிதவள மேம்பாட்டு சுட்டெண்ணின்படி, இந்தியாவில் 41.6 விழுக்காட்டு மக்கள், ஒரு நாளைக்கு 75 ரூபாய்க்கும் குறைவான ஊதியத்தில் வாழ்கின்றனர். உலகில் 82 கோடிக்கும் மேலானோர் போதிய உணவில்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை, உலகில் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 130 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாகின்றன. வீணாகும் உணவுப் பொருட்களின் பெரும்பகுதி விளைவிக்கப்படும் நிலத்திலேயே வீணாகிறது. பருவநிலை மாற்றமும் இதற்கு ஒரு காரணமாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2020, 14:43