சிரியாவில் மழைக்காக, அமைதிக்காக செபம் சிரியாவில் மழைக்காக, அமைதிக்காக செபம்  

விதையாகும் கதைகள்: கடவுளது கடை

கடையின் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்த கடவுள், பக்தனிடம், மகனே, நீ என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கின்றேன், இங்கே பழங்கள் விற்கப்படுவதில்லை, விதைகள் மட்டுமே விற்கப்படுகின்றன என்று சொன்னார்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒருவருக்கு மகிழ்ச்சி தேவைப்பட்டது. அதை எப்படிப் பெறுவது என்று பலரிடம் கேட்டுப் பார்த்தார். எல்லாருமே தெரியாது என்று கையை விரித்ததோடு ஆண்டவனைக் கேட்டுப் பார் என்று ஆலோசனையும் கூறினார். ஆண்டவனை எங்கே போய்த் தேடுவது என்று அவருக்குப் புரியவில்லை. அவரும் அலுத்துப்போய் படுக்கையில் சாய்ந்தார். அன்று அவருக்கு தூக்கத்தில் ஒரு கனவு. அதில் கடவுள் ஒரு கடை வைத்திருந்தார். அங்கு கடவுள் கல்லாப்பெட்டி அருகே அமர்ந்திருந்தார். அந்த மனிதர் கடவுளிடம், இந்தக் கடையில் என்ன கிடைக்கும்? என்று கேட்டார். உனக்குத் தேவையானதெல்லாம் இங்கே கிடைக்கும் என்றார் கடவுள். அப்போது அந்த மனிதர், எனக்கு அன்பு வேண்டும், அமைதி வேண்டும், மகிழ்ச்சி வேண்டும், ஞானம் வேண்டும், அச்சத்திலிருந்து விடுதலை வேண்டும்... இவையெல்லாம் எனக்கு மட்டுமல்ல, இந்த உலகிலுள்ள எல்லாருக்கும் வேண்டும் என்று சொன்னார். கடவுள் சிரித்தார். அதன்பிறகு கடவுள் சொன்னார், மகனே, நீ என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கின்றேன், இங்கே பழங்கள் விற்கப்படுவதில்லை, விதைகள் மட்டுமே விற்கப்படுகின்றன என்று. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2020, 14:36