தாய்லாந்து புத்தமத துறவிகள் தாய்லாந்து புத்தமத துறவிகள் 

விதையாகும் கதைகள் : மனப்பார்வை

மனப்பார்வைக்கு விளக்கங்களும், அர்த்தங்களும் தேவையில்லையே

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒருமுறை ஞானி இக்கயூ அவர்களிடம் ஒருவர் சென்று, மிகச் சுருக்கமான ஞான மொழி ஒன்றை எழுதித்தருமாறு கேட்டார். அப்போது ஞானி, ‘பார்’ என்று எழுதிக்கொடுத்தார். ப்பூ, இவ்வளவு சுருக்கமாக இருக்கிறதே, இன்னும் கொஞ்சம் சேர்க்கலாமே என்று அவர் சொன்னதால், ஞானி, ‘பார்’, ‘பார்’ என்று எழுதிக்கொடுத்தார். பொறுமை இழந்த அவர் ஞானியிடம், சரி, அதன் அர்த்தத்தையாவது விளக்கி எழுதிக்கொடுங்கள் என்று கேட்டார். அப்போது ஞானி இக்கயூ அவர்கள், ‘பார்’ என்றால், ‘பார்’ என்றுதான் அர்த்தம் எழுதிக்கொடுத்தாராம்.

ஆம். மனப்பார்வைக்கு விளக்கங்களும், அர்த்தங்களும் தேவையில்லையே.(பேராசிரியர்  சேவியர் அந்தோனி சே.ச.)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2020, 13:32