மரத்தில் இளைப்பாறும் சிட்டுக்குருவிகள் மரத்தில் இளைப்பாறும் சிட்டுக்குருவிகள் 

விதையாகும் கதைகள் : அவரவர் சூழ்நிலை

நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழவேண்டும் ௭ன்றுதான், அன்று, உனக்கு இடம் இல்லை ௭ன்றேன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஓர் ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன. அவ்வழியே வந்த ஒரு சிட்டுக்குருவி ஒரு மரத்திடம், 'மழைக்காலம் தொடங்கவிருப்பதால், நானும், ௭ன் குஞ்சுகளும் வாழ, கூடு ஒன்றைக் ௧ட்டிக்கொள்ள அனுமதிக்க முடியுமா?' ௭ன்று கேட்டது. முதலில் இருந்த அந்த மரம் 'முடியாது' என்றது. அடுத்த மரத்திடம் கேட்டது குருவி, அது அனுமதித்தது.

குருவி கூடு கட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த வேளையில், ஒருநாள் பலத்த மழை. ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்துச்சென்றது. அம்மரம், தண்ணீரில் அடித்துச் செல்வதைக் கண்ட குருவி சிரித்துக் கொண்டே, "அன்று ௭னக்கு கூடு கட்ட இடம் இல்லை ௭ன்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய்" ௭ன்றது!

அதற்கு அம்மரம் குருவியை நோக்கி, "௭னக்கு அப்போதே தெரியும், நான் வலுவிழந்து விட்டேன். ௭ப்படியும் பெரு மழைக்கு நான் தாங்கமாட்டேன், தண்ணீரில் ஒருநாள் அடித்துச் செல்லப்படுவேன் என்பது. நீயும் உன்  குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழவேண்டும் ௭ன்றுதான், அன்று  உனக்கு இடம் இல்லை ௭ன்றேன்! என்னை மன்னித்து விடு!" என்றது.

உங்களை யாரும் நிராகரித்தால் தயவுசெய்து தவறாக நினைக்காதீர்கள்! அவரவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டும்தான் தெரியும்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2020, 13:33