வாழ்வின் கொடைகள் வாழ்வின் கொடைகள் 

விதையாகும் கதைகள்: வாழ்வின் வளமான கொடைகள்

ஆண்டவன் ஒரு துன்பத்தை ஒருவருக்கு அளித்திருக்கிறான் என்றால், அதை வென்று வெற்றி கொள்ளும் திறமை அவருக்கு உள்ளது என்கிற காரணத்தில்தான்!

மேரி தெரேசா: வத்திக்கான்

அன்று பௌணர்மி இரவு. கவிஞர்கள் முழுநிலவை மெய்மறந்து பாடிக்கொண்டிருந்தனர். அப்போது வானத்திற்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அது வானவில்லைப் பார்த்து, சூரியன்தானே நிலவுக்கு ஒளி தருகிறது, அப்படியிருக்க, இந்த மனிதர்கள், சூரியனைப் பற்றிப் பாடுவதில்லை, நிலவைப் பற்றி மட்டும் ஏன் இத்தனை கவிதைகளயும், பாடல்களையும் பாடுகின்றனர் என்று கேட்டது. அதற்கு வானவில், மனிதர் மத்தியில் ஒரேமாதிரி இருப்பவர்களுக்கெல்லாம் மரியாதை கிடையாது. வளர்வது, தேய்வது, மீண்டும் வளர்வதுதான் அவர்களுக்குப் பிடிக்கும். சூரியன் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் நிலவு அப்படியில்லைதானே, எனவேதான் அதைப் புகழ்ந்து இத்தனை கவிதைகள் பாடல்கள் என்று சொன்னது. அதோடு இன்னொன்றையும் சொல்லிவைத்தது வானவில். இவ்வுலகில் இரவல் மினுமினுப்புக்களுக்குத்தானே மதிப்பு என்று.

ஆம். வளங்களில் மட்டும் வளரும் வாழ்வு, வளமானதாக அமையாது. சுமைகளும் சோகங்களும் நிறைந்த வாழ்வே வளமானதாக அமையும். ஆண்டவன் ஒரு துன்பத்தை ஒருவருக்கு அளித்திருக்கிறார் என்றால், அதை வென்று வெற்றிகொள்ளும் திறமை அவருக்கு உள்ளது என்கிற காரணத்தில்தான்!

“ஒருவர் நாளையைப் பற்றிச் சிந்திக்கையில், சோதனை மேகங்கள் அவரைச் சூழ்ந்து துன்புறுத்தினாலும், நம்பிக்கை எனும் வானவில்களைப் பற்றிக்கொள்ளமட்டும் மறக்கக்கூடாது” (Bobette Bryan)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2020, 14:20