தேடுதல்

Vatican News
புனித அன்னை தெரேசா திருவுருவ சிலை புனித அன்னை தெரேசா திருவுருவ சிலை   (AFP or licensors)

விதையாகும் கதைகள் : இறந்த பின் வாழ்வது எப்படி…

தாங்கள் வாழ்ந்த காலத்தில் ஏழை எளியோருக்கும், நோயாளிகளுக்கும் சுயநலமில்லாமல் செய்த உதவியால், இறந்தபின்னரும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்போர் இன்று பல ஆயிரம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஆறாம் வகுப்பு ஆசிரியர் மரங்களைப் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன்,  ‘சார் மனுசங்களாம் எண்பது, தொண்ணூறு வயசானதும் இறந்து போய்டுறாங்க. ஆனா இந்த மரங்கள் மட்டும் எவ்வளவு வயசானாலும் சாகறதே இல்ல. அது மாதிரி மனுசங்களும் சாகாமலே வாழ முடியாதா..?’ என்று கேட்டான்.

‘மனிதனாப் பிறந்தா இறந்துதான் போகனும் என்பது நியதி. ஆனா வாழுற காலத்துல நல்ல முறையா வாழ்ந்தோம்னா, இறந்த பின்னாடியும் வாழலாம்’ என்றார் ஆசிரியர்.

‘இறந்த பின்னாடி பேயாத்தான் வாழலாம்’ என்று யாரோ சொல்ல, எல்லாரும் சிரித்தனர்.

உடனே ஆசிரியர், ''அன்னை தெரேசா இறந்து ரொம்ப வருசமாச்சு. ஆனாலும் இன்னைக்கு வர நாம யாருமே மறக்கல. அவங்கள பத்தி பாடத்துல படிக்கிறோம். அவங்களோட உருவத்த சிலையாவும் போட்டோவாவும் வச்சிருக்கோம். அது மட்டுமில்லாம புனிதர் பட்டம் வேற அவருக்கு கொடுத்திருக்கோம். இதுக்கு காரணம் என்ன..? அவங்க வாழ்ந்த காலத்துல ஏழை எளியோருக்கும், நோயாளிக்கும் சுயநலமில்லாம செய்த உதவிதான் காரணம். நீங்களும் இறந்த பின்னாடி வாழணும்னா, வாழுற காலத்துல நல்ல மனிதனா வாழுங்க '' என்றார்.

08 April 2020, 12:17