மாட்டுவண்டி, கம்போடியா மாட்டுவண்டி, கம்போடியா 

விதையாகும் கதைகள்: தன்னை அளந்தவன்....

தன்னை அளந்தவன், மண்ணை அளந்தவன் - காசி ஆனந்தன்

மேரி தெரேசா: வத்திக்கான்

அன்றாடம் ஓடிக்கொண்டிருந்த வண்டிச் சக்கரத்தைப் பார்த்து, “மண் முழுவதும் சுற்றி வருகிறாயே, நீ பெற்ற அனுபவம்தான் என்ன?” என்று தெரு கேட்டது. அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் சிறிதுநேரம் அமைதி காத்தது சக்கரம். பின்னர் அது தெருவைப் பார்த்து, “நான் என்னையே பலமுறை சுற்றி அளந்து கொள்கிறேன். அதனால்தான் உலகத்தையே அளந்து வருகிறேன்” என்று சொன்னது. பின்னர் மீண்டும் தெருவைப் பார்த்து, புரிகிறதா? என்று கேட்டது சக்கரம். உடனே அது சொன்னது – தன்னை அளந்தவன், மண்ணை அளந்தவன் என்று. (காசி ஆனந்தன் கதைகள்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2020, 14:22