தேடுதல்

Vatican News
கடவுளும் பக்தரும் கடவுளும் பக்தரும் 

விதையாகும் கதைகள்: எங்கும், எதிலும் நன்மைத்தனமே

கடவுளது படைப்பில் எங்கும் எதிலும் எப்போதும் நன்மையே நிறைந்திருக்கின்றது.

மேரி தெரேசா : வத்திக்கான்

பக்தர் ஒருவர் கடவுளிடம், அருமையான குரலுக்குச் சொந்தமான குயிலுக்கு அழகற்ற உடலையும், அருமையற்ற குரலுக்குச் சொந்தமான மயிலுக்கு அழகான உடம்பையும் ஏன் படைத்தாய் என்று கேட்டார். கடவுளிடம் அறிவார்ந்த கேள்வியைக் கேட்டுவிட்டதாக மகிழ்ந்து கடவுளின் பதிலுக்காகக் காத்திருந்தார் பக்தர். அப்போது கடவுள், அழகான உடலைக் குயிலுக்கும், அருமையான குரலை மயிலுக்கும் தந்திருப்பேனாகில், இரண்டுக்கும் பாதுகாப்பே இருந்திருக்காது. ஆமாம் பக்தா, எதையும் நான் குறைவுள்ளதாகப் படைத்ததாக நினைவில்லையே என்று பதில் சொன்னார்.

கடவுளின் பதில் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்த பக்தர், உண்மைதான். எங்கும், எதிலும் நன்மைத்தனமே என்று வாழ்ந்துவிட்டால் வாழ்வில் ஏது வேறுபாட்டுச் சுவை என்ற முடிவுக்கு வந்தார். கடவுளது படைப்பில் எங்கும் எதிலும் எப்போதும் நன்மையே நிறைந்திருக்கின்றது. (அ.பணி சேவியர் அந்தோனி சே.ச.)

02 April 2020, 12:03