நடமாடும் ஐஸ்கிரீம் கடை நடமாடும் ஐஸ்கிரீம் கடை  

விதையாகும் கதைகள் : ஐஸ்க்ரீம் பிறந்த கதை

ஆளாளுக்கு கருத்துச் சொன்னார்கள்! ஒருவர் சொன்ன கருத்து அனைவரையும் சிரிக்க வைத்தது, ஆனால், உரிமையாளரை மட்டும் சிந்திக்க வைத்தது!

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்காவில் பிரபல ஐஸ்க்ரீம் நிறுவனம்! அங்கு கூட்டம் அலைமோதும்! கப்புகளைக் கழுவி அடுத்தவருக்கு சப்ளை செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்! எத்தனை கருவிகள் வந்தும் தேவையை நிறைவு செய்ய முடியவில்லை! உரிமையாளர் சிந்தித்தார்! ஒரு போட்டி வைத்தார்! சிறந்த கருத்துக்குப் பரிசு என்றார்! ஆளாளுக்கு கருத்துச் சொன்னார்கள்! ஒருவர் சொன்ன யோசனை அனைவரையும் சிரிக்க வைத்தது, ஆனால், உரிமையாளரை மட்டும் சிந்திக்க வைத்தது! கப்புகளைக் கழுவுவதற்குப் பதிலாக அதையே சாப்பிடும்படி செய்தால் என்ன? இதுதான் அவர் சொன்ன யோசனை! அவருக்குப் பரிசு கிடைத்தது! கோன் ஐஸ்க்ரீம் பிறந்த கதை இதுதான்!

வித்தியாசமான சிந்தனை வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2020, 13:09