தேடுதல்

எருமை மாடு எருமை மாடு  

விதையாகும் கதைகள்: ஐந்தறிவு கற்றுக்கொடுத்த கல்வி

எவரும், தனக்கு மட்டுமே ஓர் எண்ணம் தோன்றும் என்று நினைக்கக் கூடாது. மற்றவர்களுக்கும் எண்ணம் வருவது இயல்பு என்பதையும் மறத்தலாகாது.

மேரி தெரேசா: வத்திக்கான்

இரங்கநாதன் என்ற இளைஞன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார். அந்நேரத்தில் ஓர் எருமை மாடு ஆற்று நீரில் இறங்கியது. அப்போது இரங்கநாதன், எருமையே, நான் குளித்துக்கொண்டிருக்கும் இடத்தில் நீயும் குளிப்பதற்கு இறங்குகிறாயே, மரியாதையாய் கரையேறி விடு என்று சொன்னார். எருமையோ அந்த இளைஞனிடம், மனிதா, இந்த ஆற்று நீர் எல்லாருக்கும் பொதுவானது. எனவே இந்த ஆற்றில் நான் குளித்திட நீ ஒருபோதும் தடை போட முடியாது என்று சொன்னது. அதற்கு இரங்கநாதன், எருமையே, நீ ஆற்றில் இறங்கினால் தண்ணீரெல்லாம் கலங்கிவிடும். அதன்பின்னர், நான் மட்டுமல்ல, வேறு எந்த மனிதராலும் இதில் குளித்திட முடியாது. எனவே இந்த ஆற்று நீரில் இறங்கிவிடாமல் வேறிடம் சென்றுவிடு என்று அதட்டினார். எருமை சிறிது நேரம் சிந்தித்தது. மனிதா, நீ கூறியபடி நான் இந்த இடத்தில் குளிக்கவில்லை. ஆனால் நீ குளித்து முடிக்கும்வரை கரையில் பொறுமையாகக் காத்திருக்கிறேன் என்று சொன்னது. இரங்கநாதனும் நன்றாக ஆற்றில் மூழ்கி குளித்துவிட்டு கரையேறினார். ஆனால் எருமை நீரில் இறங்காமல் சிந்தித்துக்கொண்டே நின்றது. அதைப் பார்த்த அந்த இளைஞன், எருமையே, நீ ஏன் இன்னும் தண்ணீரில் இறங்காமல் நிற்கிறாய் என்று கேட்டார். அதற்கு எருமை, மனிதா, நீ குளித்ததால், நீர் கலங்கியிருக்கிறதே, அது தெளிந்தபின்னர்தானே நான் குளிக்க முடியும், நீ சுத்தம் பார்க்கிறபோது நானும் சுத்தம் பார்க்கமாட்டேனா என்று முகத்தில் அடித்தால்போல் கூறியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 March 2020, 12:17