தேடுதல்

மகனின் கரம்பிடித்து நடத்திச்செல்லும் தந்தை மகனின் கரம்பிடித்து நடத்திச்செல்லும் தந்தை 

விதையாகும் கதைகள் : தந்தை, மகன், பேரன் என்ற வரிசையில்....

தந்தை, மகன், பேரன் என்ற வரிசையில் இறந்தால், அதுவே, இயற்கையின் நியதிப்படி அமையும். அதுவே, உங்களுக்கு மகிழ்வையும், நிறைவையும் அளிக்கும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

சிறந்த அறிஞரெனக் கருதப்பட்ட சென் குரு ஒருவரை, அவ்வூரில் வாழ்ந்த செல்வந்தர் ஒருவர் அணுகி, தானும், தன் குடும்பத்தினரும், தலைமுறை, தலைமுறையாகப் பயன்படுத்தக்கூடிய ஆசி மொழிகளை எழுதித் தரும்படி, வேண்டினார். சென் குரு, ஒரு பெரிய தாளை எடுத்து, அதில், "தந்தை சாகிறார், மகன் சாகிறான், பேரன் சாகிறான்" என்ற சொற்களை எழுதித் தந்தார்.

அதை வாசித்த செல்வந்தர், மிகுந்த கோபம் கொண்டார். "என் குடும்பத்தினருக்கும், சந்ததியினருக்கும், மகிழ்வையும், வளத்தையும் கொணரும் ஆசி மொழிகளைத்தானே உம்மிடம் கேட்டேன். உள்ளத்தை வதைக்கும் சாபம் போன்ற இச்சொற்களை ஏன் எழுதித் தந்தீர்?" என்று குருவிடம் கேட்டார், செல்வந்தர்.

அமைதியானப் புன்சிரிப்புடன், அந்த சென் குரு, விளக்கம் தந்தார். "உங்களுடைய மகன், உங்களுக்கு முன்னர் இறந்தால், அது, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தாங்கமுடியாத துயரம் தரும். அதேபோல், உங்கள் பேரன், உங்கள் மகனுக்கு முன்னதாக இறந்துபோனால், அது உங்கள் தலைமுறையினரை வேதனையில் ஆழ்த்தும். உங்கள் குடும்பத்தினர், தலைமுறை, தலைமுறையாக, நான் எழுதித் தந்துள்ள இந்த வரிசையில் இறந்தால், அதுவே, இயற்கையின் நியதிப்படி அமையும். அதுவே, உங்களுக்கு மகிழ்வையும், நிறைவையும் அளிக்கும்" என்று கூறினார், சென் குரு.

நம் வாழ்வில், எது, மகிழ்வையும், நிறைவையும் வழங்குகிறது?

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 March 2020, 14:20