பாலை நிலத்தின் நடுவே சோலை பாலை நிலத்தின் நடுவே சோலை 

விதையாகும் கதைகள் : தனியே விண்ணகம் செல்வதைவிட...

தனியே விண்ணகத்தை அடைவதைவிட, மற்றவர்களோடு இணைந்து அடைவது மேலானது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

பாலை நிலத்தில் இரு நண்பர்கள் நடந்து சென்றனர். பசியும், தாகமும் அவர்களை வாட்டியெடுத்தன. அவர்கள் பயணம் செய்த வழியெங்கும் பலர், பசியாலும், தாகத்தாலும் களைத்து, மயங்கிக்கிடந்ததைக் கண்டனர். அடுத்த நாள், அவ்விரு நண்பர்களும், சற்று தூரத்தில் ஒரு சுவரைக் கண்டனர். எட்டிப்பார்த்தபோது, சுவருக்கு மறுபக்கம், அழகியதொரு நீரோடையும், அதன் இரு கரைகளில், பழ மரங்களும் இருந்ததைக் கண்டனர்.

அவ்விருவரில் ஒருவர், "ஓ, இதுவன்றோ விண்ணகம்!" என்று கூச்சலிட்டபடி, அந்தச் சுவரைத் தாண்டிக் குதித்து, நீரோடையை நோக்கி ஓடினார். மற்றொருவர், தான் வந்த வழியே திரும்பி ஓடினார். தான் கண்ட விண்ணகத்திற்கு மற்றவர்களையும் அழைத்துவர, அவர் திரும்பிச் சென்றார்.

தனியே விண்ணகத்தை அடைவதைவிட, மற்றவர்களோடு இணைந்து அடைவது மேலானது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 March 2020, 15:26