தேடுதல்

Vatican News
கோவிட்-19 நலப்பணியாளர்கள் கோவிட்-19 நலப்பணியாளர்கள்  (AFP or licensors)

கோவிட்-19: மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு தேவை

மிக நெருக்கடியான சூழலில், பாதுகாப்புக் கருவிகள் பற்றாக்குறை இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது – ஐ.நா. அதிகாரி Tuncak

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 தொற்றுக்கிருமி நோயாளிகளுக்கு, முன்னணியில் நின்று தன்னலமற்ற சேவையாற்றும் மருத்துவர்கள், செவிலியர், முதலுதவி வழங்குவோர் மற்றும், ஏனைய மருத்துவப் பணியாளர்களுக்குப் போதுமான பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு, அரசுகளையும், தொழில் அதிபர்களையும் வலியுறுத்தியுள்ளார், ஐ.நா. அதிகாரி ஒருவர்.

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் சிறப்பு அதிகாரி Baskut Tuncak அவர்கள், மார்ச் 27, இவ்வெள்ளியன்று இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மருத்துவ நலப்பணியாளர்களின் தியாகம், மற்றும் ஓய்வில்லா பணி, மனித சமுதாயத்தின் மிகச் சிறந்த பண்பை வெளிப்படுத்துகின்றன என்றும் கூறிய Tuncak அவர்கள், நலப்பணியாளர்களை, ஹீரோக்கள் என்று பாராட்டியுள்ளதோடு, அவர்களுக்குப் பாதுகாப்பு தேவைப்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.

மிக நெருக்கடியான சூழலில், பாதுகாப்புக் கருவிகள் பற்றாக்குறை இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றும், இக்கருவிகள் வழங்கப்பட்டால், அவர்களை அக்கிருமியிலிருந்து தாக்கப்படாமல் தடுக்கலாம் என்றும், Tuncak அவர்கள் தெரிவித்துள்ளார்.

வருவாய் குறைவான நாடுகளில் இந்த பாதுகாப்பு வளங்கள் மிகக் குறைவாகவே உள்ளன என்றும், இதற்கு பொது மக்கள் மற்றும், தனிப்பட்டவரின் நிதியுதவி அவசியம் என்றும், ஐ.நா. அதிகாரி வலியுறுத்தியுள்ளார். (UN)

28 March 2020, 15:43