தொலைபேசி என்பது, வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. தொலைபேசி என்பது, வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. 

விதையாகும் கதைகள் : பொதுவான நியாயம்

தவறுகளை நியாயப்படுத்தி, ஒவ்வொருவரும், தங்களுக்குத் தாங்களே தீர்ப்பு எழுதிக் கொள்கின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒருவருக்கு வீட்டில் தொலைபேசி கட்டணம் அதிகமாக வந்தது. அவர் தன் மனைவியிடம், ‘நான் நண்பர்கள், உறவினர்களுக்கு ஃபோன் செய்ய அலுவலக ஃபோனை பயன்படுத்துகிறேன். நீதான் அதிகமாக பேசியிருப்பாய்’ என்று கூறினார்.

ஆனால் அவர் மனைவியோ, தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் ஃபோன் பேசுவதாகவும், அவர்கள் மகன், அவனது நண்பர்களிடம் பேசியதால், கட்டணம் அதிகரித்திருக்கலாம் என்றும் கூறினார். மகனோ, ‘எனக்கும் நான் வேலைசெய்யும் கம்பெனியில் ஃபோன் உண்டு. அதிலிருந்துதான் நான் ஃபோன் செய்கிறேன். நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை, சுற்றி, சுற்றி வருவதை பார்த்திருக்கிறேன்’ என்றான்.

வேலைக்காரியோ, ‘என்னை எதற்காக திட்டுகிறீர்கள்? உங்களைப்போல நானும், வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஃபோன் பேசுகிறேன்’ எனக் கூறியதும், அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்!!!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2020, 11:05