தேடுதல்

Vatican News
லால் பகதூர் சாஸ்திரியும் மகாத்மா காந்தியும் லால் பகதூர் சாஸ்திரியும் மகாத்மா காந்தியும் 

விதையாகும் கதைகள் : கண்ணீர் விட்ட சாஸ்திரி

வீர தீர சாகசம் செய்யும் ஒரு பஞ்சாபி இராணுவ வீரர் அல்லவா நீர்? நீரே அழலாமா? என்ற பிரதமரின் கேள்விக்குப் பதிலுரை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

1965ம் ஆண்டு, ஒரு மருத்துவமனையில், உயிருக்குப் போராடி கொண்டிருந்த இராணுவ அதிகாரி பூபிந்தர் சிங்க் அவர்களைக் காண, பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் சென்றார்.  பிரதமரைக் கண்டதும் பூபிந்தர் சிங்க் அழுதார். சாஸ்திரி அவர்கள், அவ்வதிகாரியிடம், "வீர தீர சாகசம் செய்யும் பஞ்சாபி அல்லவா நீர்? நீரே அழலாமா?" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பூபிந்தர் சிங்க் அவர்கள், "அய்யா, மரணத் தருவாயில் இருப்பதற்காக நான் அழவில்லை. பாரதத் திருமண்ணின் பிரதமரே வந்து, என் உடல் நலம் விசாரிக்கும்போது, எழுந்து நின்று, அவருக்கு ஒரு வீர ‘சல்யூட்’ கூட அடிக்க முடியாதபடி, என் உடல் நிலை, இப்படி மோசமாக இருக்கிறதே என்றுதான் நான் அழுகிறேன்" எனக் கூற, பிரதமர் சாஸ்திரி அவர்களின் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடியது.

28 February 2020, 11:13