தேடுதல்

Vatican News
உள்ளிருந்து உருவாகும் சக்தியால் அந்த முட்டை உடைபட்டால், உயிர் வெளியே வரும். உள்ளிருந்து உருவாகும் சக்தியால் அந்த முட்டை உடைபட்டால், உயிர் வெளியே வரும். 

விதையாகும் கதைகள் : உள்ளிருந்து உடைபடும் முட்டை

வெளியிலிருந்து வரும் சக்தியால், முட்டை உடைக்கப்பட்டால், உள்ளிருக்கும் உயிர் கொல்லப்படும். உள்ளிருந்து உருவாகும் சக்தியால் அந்த முட்டை உடைபட்டால், உயிர் வெளியே வரும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

தன் வாழ்வைப் பின்னோக்கிப் பார்த்த முதியவர் ஒருவர், தன் எண்ணங்களை இவ்வாறு பதிவுசெய்துள்ளார்: நான் புரட்சிகளை அதிகம் விரும்பிய இளைஞனாய் இருந்தபோது, "கடவுளே, உலகை மாற்றும் வரம் தா!" என்று இறைவனிடம் வேண்டினேன். நடுத்தர வயதை அடைந்தபோது என் வேண்டுதல் சிறிது மாறியது: "கடவுளே, என் குடும்பத்தினரை, நண்பர்களை, என்னைச் சுற்றியுள்ளவர்களை மாற்றும் வரம் தா!" என்பது என் செபமானது. இப்போது, வயது முதிர்ந்த நிலையில், என் இறுதி நாட்கள் எண்ணப்பட்டுள்ளன என்பதை உணர்கிறேன். இப்போது, "கடவுளே, என்னையே நான் மாற்றிக் கொள்ளும் வரம் தா!" என்பதே, என் வேண்டுதலாக உள்ளது. இந்த செபத்தை, நான் ஆரம்பத்திலிருந்தே வேண்டியிருந்தால், என் வாழ்வு எவ்வளவோ மாறியிருக்கும். ஒரு வேளை, என்னைச் சுற்றியிருந்தவர்களும், இந்த உலகமும் மாறியிருக்கும். (அந்தனி டி மெல்லோ அவர்களின் கதை)

வெளியிலிருந்து வரும் சக்தியால், முட்டை உடைக்கப்பட்டால், உள்ளிருக்கும் உயிர் கொல்லப்படும். உள்ளிருந்து உருவாகும் சக்தியால் அந்த முட்டை உடைபட்டால், உயிர் வெளியே வரும். மாற்றங்களைப் பற்றி, சிந்திக்க, தகுந்ததொரு காலம், தவக்காலம். இந்த மாற்றங்கள், உள்ளிருந்து ஆரம்பமானால், உன்னத நிலையை அடையலாம்.

25 February 2020, 14:57