இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் 

நேர்காணல் – தமிழகத்தின் சமுதாய நெருக்கடிகள்

இந்திய நடுவண் அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து, நடுங்கும் குளிரிலும், ஐம்பது நாள்களாக மேலாக, பெண்கள் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்

மேரி தெரேசா – வத்திக்கான்

இந்திய நடுவண் அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதே குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து, நடுங்கும் குளிரிலும்,  பெண்கள், ஐம்பது நாள்களாக மேலாக, தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். அதோடு, தமிழகத்தில், மூடப்பட்டுள்ள தூத்துக்குடி தாமிர உருக்காலை தொடர்பாகவும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. தூத்துக்குடி ஒரு போராட்ட களமாகவே மாறியுள்ளது என்று, மனித உரிமை ஆர்வலர்கள் சொல்கின்றனர். இவ்விரண்டு விவகாரங்கள் பற்றி மனித உரிமை ஆர்வலர்கள் அருள்பணியாளர்கள் ஜேம்ஸ் விகட்ர், எக்ஸ்.டி.செல்வராஜ் ஆகிய இருவரும் வாட்சப் வழியாகப் பகிர்ந்துகொண்டவை....

நேர்காணல் – தமிழகத்தின் சமுதாய நெருக்கடிகள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2020, 15:25