தேடுதல்

பெருங்கடலின் பாதுகாப்பை வலியுறுத்தும் கலை வடிவம் பெருங்கடலின் பாதுகாப்பை வலியுறுத்தும் கலை வடிவம் 

பெருங்கடல்களைப் பாதுகாக்க துணிச்சலான முயற்சி

வருகிற ஜூன் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை, லிஸ்பன் நகரில், உலகளாவிய பெருங்கடல்களைப் பாதுகாப்பது குறித்த ஐ.நா. கருத்தரங்கு நடைபெறவுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகின் பெருங்கடல்களைப் பாதுகாப்பதற்கு, அரசுகளும், கூட்டுறவு அமைப்புகளும் துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், வலியுறுத்தியுள்ளார்.

வருகிற ஜூன் மாதத்தில், போர்த்துக்கல் நாட்டில் நடைபெறவிருக்கும் பெருங்கடல்கள் குறித்த ஐ.நா. கருத்தரங்கிற்குத் தயாரிப்பாக, நியு யார்க்கில் நடைபெற்ற இரண்டு நாள்  கூட்டத்தில், இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார், கூட்டேரஸ்.

“நடவடிக்கை எடுப்பதற்கு பெருங்கடல் அழைக்கின்றது” என்ற தலைப்பில், சூழலியல் ஆர்வலர்கள் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பேசிய கூட்டேரஸ் அவர்கள்,  கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களுக்கு உதவுவது, ஆக்சிஜனை உற்பத்தி செய்வது, கார்பனை உறிஞ்சுவது உட்பட, பெருங்கடல்களின் பலதரபட்ட பயன்களை சுட்டிக்காட்டினார்.

இப்பூமிக்கோளத்தின் வாழ்வாதார அமைப்பு போன்று, பெருங்கடல்களின் வாழ்வு அமைப்பும், இப்போது சேதப்படுத்தப்பட்டு வருகின்றது என்று கூறிய கூட்டேரஸ் அவர்கள், பெருங்கடல்களைப் பாதுகாப்பதற்கு, உலக அரசுகளுக்கு 2020ம் ஆண்டு அரியதொரு வாய்ப்பு என்றும் கூறினார்.

வருகிற ஜூன் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை, லிஸ்பன் நகரில், உலகளாவிய பெருங்கடல்களைப் பாதுகாப்பது குறித்த ஐ.நா. கருத்தரங்கு நடைபெறவுள்ளது. (UN)     

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 February 2020, 14:41