ஹெய்ட்டி நில அதிர்ச்சியின் 10ம் ஆண்டு நிறைவு ஹெய்ட்டி நில அதிர்ச்சியின் 10ம் ஆண்டு நிறைவு 

ஹெய்ட்டி நில அதிர்ச்சியின் 10ம் ஆண்டு நிறைவு

ஹெய்ட்டியில் ஒரு வளமான வருங்காலத்தை கட்டியெழுப்புவதற்கு உதவும் அர்ப்பணத்தை புதுப்பிப்பதாக, ஐ.நா. பொதுச் செயலரின் அறிக்கை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஹெய்ட்டியில் மிகப்பெரிய நில நடுக்கமும், உயிழப்புகளும் இடம்பெற்று 10 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அந்நாடு ஒரு வளமான வருங்காலத்தை கட்டியெழுப்புவதற்கு உதவும் அர்ப்பணத்தை புதுப்பிப்பதாக ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் தெரிவித்தார்.

பத்தாண்டுகளுக்கு முன்னர், அதாவது, 2010ம் ஆண்டு சனவரி மாதம் 12ம் தேதி, ஹெய்ட்டி நாட்டின் தலைநகர் Port-au-Princeல் இடம்பெற்ற பெரும் நில நடுக்கத்தால் ஏறக்குறைய 2 இலட்சத்து, 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதில் 102 ஐ.நா. பணியாளர்களும் அடங்குவர். 

கடந்த 10 ஆண்டுகளாக அனைத்துலக சமுதாயத்தின் உதவியுடன் வளர்ச்சிப் பாதையில் நடைபோட முயன்றுவரும் ஹெய்ட்டி நாட்டிற்கு, ஐ.நா. அமைப்பின் உதவிகள் தொடர்ந்து இருக்கும் என்ற உறுதியை வழங்கினார், பொதுச்செயலர் கூட்டேரஸ்.

இதற்கிடையே, ஹெய்ட்டியில் பணிகள் ஆற்றிக்கொண்டிருந்தபோது, நில நடுக்கத்தில் உயிரிழந்த 102 ஐ.நா. பணியாளர்களுக்கென உலகின் பல்வேறு இடங்களில், இவ்வாரத்தில் நினைவுக்கூட்டங்கள் இடம்பெற உள்ளன. (UN)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 January 2020, 15:54