உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் முன் பொன்மணிகள் உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் முன் பொன்மணிகள் 

விதையாகும் கதைகள் : ஆசைக்கு அளவில்லை

நினைப்பதெல்லாம் கிடைத்தாலும், இன்னும் எதை நினைப்பது என்ற திசையிலேயே மனித மனம் சென்றுகொண்டிருக்கும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஏழை ஒருவரின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள் அவர் முன்னே தோன்றி “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். “பணம், செல்வம், தங்கம், வைரம்!” என்றார் ஏழை, ஆசையோடு. கடவுள் வலது கையின் சுட்டு விரலை நீட்டினார். அங்கிருந்த பீரோ தங்கமானது. ஆனால் ஏழை பேசாமல் இருந்தார். கடவுள் மறுபடி விரலை நீட்ட, அங்கிருந்த மேடை தங்கமானது. ஏழையின் முகத்தில் மகிழ்வில்லை. அவர் பேசாமல் இருந்தார். கடவுள் வேக வேகமாக அந்த அறையில் உள்ள பொருட்களையெல்லாம் தங்கமாக்கினார். அப்போதும் ஏழை சிரிக்கவில்லை. சோர்ந்து போன கடவுள் ஏழையிடம் கேட்டார். “இன்னும் உனக்கு என்ன வேண்டும்?” என்று. “அந்த விரல் வேண்டும்” என்றார் ஏழை.

பேராசை என்பது, முற்றுப்புள்ளியின்றி தொடர்வது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2020, 12:47