2019ம் ஆண்டில் கற்ற பாடங்களுக்கு நன்றி, 2020ம் ஆண்டை உருவாக்குவோம் 2019ம் ஆண்டில் கற்ற பாடங்களுக்கு நன்றி, 2020ம் ஆண்டை உருவாக்குவோம் 

விதையாகும் கதைகள் : புத்தாண்டுத் தீர்மானங்கள்

ஒவ்வோர் ஆண்டின் துவக்கத்திலும் நாம் கடைபிடிக்க விரும்பும் பல தீர்மானங்களை மனதில் நினைக்கிறோம். புத்தாண்டுத் தீர்மானங்கள், சிந்தனையில் உருவானால் மட்டும் போதாது, அவை, செயலிலும் உருபெறவேண்டும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

மகன் தன் தந்தையிடம் புதிர் ஒன்றைத் தொடுத்தான். "ஒரு குளத்தின் கரையில் மூன்று தவளைகள் அமர்ந்திருந்தன. அவற்றில் ஒன்று, குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. இப்போது, எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?" என்று கேட்டான். "இது என்ன பெரிய புதிர்... இரண்டு தவளைகள் இருக்கும்." என்று பெருமையாகச் சொன்னார் தந்தை.

"அப்பா, கேள்வியைச் சரியாகப் புரிந்துகொண்டு பதில் சொல்லுங்கள். மூன்று தவளைகளில், ஒன்று, குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. இப்போது, எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?" என்று கேள்வியை மீண்டும் சொன்னான்.

அப்பா எதையோ புரிந்து கொண்டவர் போல், "ஓ, புரிகிறது. கரையில் ஒன்றும் இருக்காது. ஒரு தவளை குதித்ததும், மற்ற இரு தவளைகளும் குளத்திற்குள் குதித்துவிடும்" என்று சொன்னார். தனது அறிவுத் திறனை தானே மெச்சிக் கொண்டதைப்போல், அவர் புன்னகை பூத்தார்.

மகன் தலையில் அடித்துக்கொண்டு, சலிப்புடன் விளக்கம் சொன்னான்: "அப்பா, மீண்டும் தவறாகச் சொல்கிறீர்கள். மூன்று தவளைகளும் கரையில்தான் இருக்கும். அவற்றில் ஒன்று, குளத்திற்குள் குதிக்க, தீர்மானம் செய்ததேயொழிய, இன்னும் குதிக்கவில்லை" என்று மகன் விளக்கம் கொடுத்தான்.

ஒவ்வோர் ஆண்டின் துவக்கத்திலும் நாம் கடைபிடிக்க விரும்பும் பல தீர்மானங்களை மனதில் நினைக்கிறோம். புத்தாண்டுத் தீர்மானங்கள், சிந்தனையில் உருவானால் மட்டும் போதாது, அவை, செயலிலும் உருபெறவேண்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2020, 14:39