வைரங்கள் பதித்த ஆபரணம் வைரங்கள் பதித்த ஆபரணம் 

விதையாகும் கதைகள் : தேவையை பொறுத்து மதிப்பு மாறும்

வைரக்கல்லின் தேவையில்லாதவனுக்கு, அவனைப் பொறுத்தவரையில் அதற்கு மதிப்பில்லை, அதை சாதாரண கல்லாகவே பார்ப்பான்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கர் ஒருவருக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது. அது வைரம் என்றறியாமல், விலை போகுமா என்ற சந்தேகத்துடன், கடைத்தெருவுக்கு எடுத்துச்சென்றார். அவர் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவர், இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டார். ஆனால் வழிபோக்கரோ, பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன், 25 ரூபாய் கேட்டார். ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும், 20 ரூபாய்க்கு மேல் தரமுடியாது என்று மறுத்தார். இதைக் கவனித்த மற்றொரு வியாபாரி, 25 ரூபாய் கொடுத்து அந்த வைரத்தை வாங்கிச்சென்றார். ஆத்திரமடைந்த முதல் வியாபாரி, அந்த வழிப்போக்கரைப் பார்த்து, “அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும். அறிவில்லாமல் விற்றுவிட்டாயே!” என்று திட்டினார். அதற்கு அந்த வழிப்போக்கரோ, “அந்தக் கல்லுக்கு நான் கொடுத்திருந்த மதிப்பு அவ்வளவுதான். ஆனால் அது வைரம் என்றும், அதன் மதிப்பு எவ்வளவு என்றும் தெரிந்தபின்னரும், அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய முட்டாள்” என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 January 2020, 13:41