புகையிலை கட்டுப்பாடு குறித்து அரசு அதிகாரிகளின் அறிவிப்பு புகையிலை கட்டுப்பாடு குறித்து அரசு அதிகாரிகளின் அறிவிப்பு 

புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது

தென் கிழக்கு ஆசியாவில் 15ம், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய ஆண்கள் மற்றும் பெண்களில் 45 விழுக்காட்டினர் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகளவில் புகையிலை பயன்படுத்தும் ஆண்கள் மற்றும், சிறுவர்களின் எண்ணிக்கை, எண்ணிக்கை, கடந்த இருபது ஆண்டுகளாக அதிகரித்துவந்தவேளை, தற்போது உலகளவில் முதன்முறையாக அவ்வெண்ணிக்கை குறைந்து வருகின்றது என்று, WHO எனும் உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

WHO நிறுவனத்தின் நலவாழ்வை ஊக்குவிக்கும் துறையின் இயக்குனர் டாக்டர் Ruediger Krech அவர்கள், ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் இத்தகவலை அறிவித்துள்ளார்.

2018ம் ஆண்டில், உலகளவில், நூறு கோடிக்கு அதிகமான ஆண்கள் புகையிலையைப்   பயன்படுத்தினர் எனவும், இவ்வெண்ணிக்கை இரண்டாயிரமாம் ஆணடைவிட நான்கு கோடிக்கு அதிகம் என்றும் கூறிய டாக்டர் Krech அவர்கள், இப்போதைய நிலவரப்படி, 2020ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை, ஏறத்தாழ இருபது இலட்சமாகக் குறையும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

2025ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை ஐம்பது இலட்சமாகக் குறையும் என்றும் உரைத்த டாக்டர் Krech அவர்கள், இந்த நூற்றாண்டு துவங்கியது முதல், புகையிலை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை,10 கோடியாகக் குறைந்துள்ளது என்றும் கூறினார்.

2018ம் ஆண்டில், 13க்கும் 15 வயதுக்கும் உட்பட ஏறத்தாழ 4 கோடியே 30 இலட்சம் சிறாரும், 24 கோடியே 40 இலட்சம் பெண்களும், புகையிலையைப் பயன்படுத்தியுள்ளனர். உலகில், தென் கிழக்கு ஆசியாவில் புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். ஆனால், ஐரோப்பா மற்றும், மேற்கு பசிபிக் பகுதிகளில் குறைந்து வருகின்றது என்று, WHO நிறுவனம் கூறியுள்ளது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 December 2019, 16:23