நிமோனியா நோய் கண்ட குழந்தையிடம் சோதனை நிமோனியா நோய் கண்ட குழந்தையிடம் சோதனை 

நிமோனியா விழிப்புணர்வு உலக நாள் நவ.12

நிமோனியாவால், ஒவ்வொரு நாளும் ஐந்து வயதுக்குட்பட்ட 2,200 குழந்தைகள் இறக்கின்றனர். 2018ம் ஆண்டில், வயிற்றுப்போக்கால் 4,37,000 குழந்தைகளும், மலேரியாவால் 2,72,000 குழந்தைகளும் இறந்துள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

நிமோனியா அல்லது நுரையீரல் அழற்சி என்ற நோயால், ஒவ்வோர் ஆண்டும் ஐந்து வயதுக்குட்பட்ட 15 கோடியே 50 இலட்சம் குழந்தைகள் தாக்கப்படுகின்றனர் மற்றும், 16 இலட்சம் குழந்தைகள் இறக்கின்றனர் என்று, உலக நலவாழ்வு நிறுவனமும், யுனிசெப் அமைப்பும் கூறியுள்ளன.

இந்நோய் தடுத்துநிறுத்தவல்லது மற்றும், சிகிச்சை அளிக்கக் கூடியது என்றுரைக்கும் இந்த அமைப்புகள், எய்ட்ஸ், மலேரியா, தட்டம்மை போன்ற நோய்களால் இறக்கும் குழந்தைகளைவிட, நிமோனியாவால் இறக்கும் குழந்தைகளே அதிகம் என்று கூறியுள்ளன.

நவம்பர் 12, இச்செவ்வாயன்று, நிமோனியா விழிப்புணர்வு உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள இந்த ஐ.நா. அமைப்புகள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு, நிமோனியாவே முதல் காரணம் என்று கூறியுள்ளன. இருமல், நெஞ்சுவலி, காய்ச்சல், மூச்சுவிடக் கடினமாக இருத்தல் போன்றவையே, இந்நோய்க்குரிய அறிகுறிகள் ஆகும்.

2009ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 12ம் தேதி, நிமோனியா விழிப்புணர்வு உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. (Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2019, 15:28