தேடுதல்

Vatican News
பயிர்களுக்கு பூச்சி மருந்தடிக்கும்  விவசாயி பயிர்களுக்கு பூச்சி மருந்தடிக்கும் விவசாயி  (AFP or licensors)

பூமியில் புதுமை: இரண்டு மடங்கான விவசாயிகள் தற்கொலைகள்

இந்தியாவில், கடந்த, 20 ஆண்டுகளில், நமக்கு உணவு கொடுக்கும், 3 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

மகாராஷ்ட்ராவில் கடந்த நான்கு ஆண்டுகளில், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. மகாராஷ்ட்ராவில் உள்ள மாவட்டங்களில் அமராவதி மாவட்டம் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகளைப் பதிவு செய்திருக்கிறது. இந்தியாவில், கடந்த, 20 ஆண்டுகளில், நமக்கு உணவு கொடுக்கும், 3 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 70 ஆண்டுகளில், இந்தியாவில் நடந்த நான்கு போர்களில் கூட, 3 இலட்சம் பேர் இறக்கவில்லை. காவிரிப் படுகையில் மட்டும், 12 ஆண்டுகளில், மொத்தம், 47 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நாடு முழுவதும், கடந்த 2016ம் ஆண்டில் மட்டும், 11,400 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக, நாடாளுமன்றத்தில், மத்திய விவசாயத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்தது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

பருவமழை பொய்த்ததால், விவசாயிகள், பயிர்களைக் காப்பாற்றமுடியாமலும், வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்தமுடியாமலும் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கவேண்டுமானால், அவர்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான அளவு, பொருளாதார நிலை மேம்படவேண்டும். 

15 November 2019, 15:08