இந்தியா விவசாயம் இந்தியா விவசாயம் 

பூமியில் புதுமை: விவசாயம் குறித்த நம் கண்ணோட்டம்

‘கவிதையை என்னைப்போன்ற பாமரர்கள் படைக்க முடியும், ஆனால் மலர்களை ஆண்டவனால் மட்டுமே படைக்கமுடியும்’என்றார் வங்கக் கவிஞர் தாகூர். அதுபோல ஆயிரமாயிரம் பயிர்ச் செடிகளைப் படைக்கும் விவசாயிகள், உண்மையில் இறைவனின் கருவிகளே

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

“உலகளவில் இந்தியா ஒரு விவசாய நாடு. உழவும் மருத்துவமும்தான் நமது ஆதித்தொழில். அனைவரும் விவசாயிகளாக மாறவேண்டும். தனக்குத் தேவையான உணவை ஒவ்வொருவரும் தானே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். விவசாயம் அறியாதோரையும் விவசாயியாக மாற்றும் முயற்சி வேண்டும்”என்ற விழிப்புணர்வு இன்று அதிகரித்து வருகின்றது. அண்மை திரைப்படங்கள் பல, விவசாயத்தையும், விவசாயிகளையும் ஓஹோ என்று போற்றுகின்றன. நீரிலே முத்தெடுக்காமல், நிலத்திலே முத்தெடுத்து உலகுக்கு உணவளிக்கும் உன்னதத் தொழில்தான் விவசாயம். இதைச் செய்யும் விவசாயிகள் கடவுள் கண்டெடுத்த தொழிலாளிகள். ‘கவிதையை என்னைப்போன்ற பாமரர்கள் படைக்க முடியும், ஆனால் மலர்களை ஆண்டவனால் மட்டுமே படைக்கமுடியும்’என்றார் வங்கக் கவிஞர் தாகூர். அதுபோல ஆயிரமாயிரம் பயிர்ச் செடிகளைப் படைக்கும் விவசாயிகள் உண்மையில் இறைவனின் கருவிகளே.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த திருவள்ளுவர் என்ன சொல்கிறாரென்று பார்ப்போமா. ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’ என்கிறார். உலகம் பல தொழில்களைச் செய்து சுழன்றாலும், ஏர்த் தொழிலின் பின்னால்தான் நிற்கிறது. அதனால், எவ்வளவு துன்புற்றாலும் உழவுத்தொழிலே சிறந்தது என தெள்ளத் தெளிவாக கூறுகிறார்.

உழவுத்தொழிலே முதன்மையானது என்பது நூற்றுக்கு நூறு உண்மையென்றாலும், உணவளித்து உலக மக்களை வாழ வைக்கிறது விவசாயமே என்றாலும், விவசாயத்தை நம்மில் பலரும் பார்க்கும் விதம் வேறாகத்தான் இருக்கிறது என்பதே சுடுகின்ற உண்மை!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2019, 14:39