தேடுதல்

இந்தியச் சிறுமிகள் இந்தியச் சிறுமிகள் 

உலக சிறுமிகள் நாள் அக்டோபர் 11

உலகில், 6 வயதுக்கும், 17 வயதுக்கும் உள்ளிட்ட 13 கோடிச் சிறுமிகள், பள்ளிக்கூட வாசனையே அறியாதவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“தடுத்து நிறுத்தப்பட மற்றும், பதிவு செய்யப்பட முடியாததுமான மகளிர் சக்தி (GirlForce: Unscripted and Unstoppable)" என்ற கருப்பொருளில், அக்டோபர் 11, இவ்வெள்ளியன்று, உலகெங்கும், சிறுமிகள் நாள் சிறப்பிக்கப்பட்டது.

பெண்ணெனும் மகா சக்தியின் பல்வேறு பரிமாணங்களை உலகம் முழுவதும் உணர்த்தி பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உலக அரங்கில் நிலை நாட்டும் நோக்கத்தில், 2012ம் ஆண்டிலிருந்து இந்த உலக நாள் சிறபிக்கப்பட்டு வருகிறது.

இந்நாளை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள, ஐ.நா. வின் குழந்தை நல யூனிசெப் அமைப்பு, உலகில், ஒவ்வோர் ஆண்டும், 18 வயதுக்குட்பட்ட, ஏறத்தாழ 1 கோடியே 20 இலட்சம் சிறுமிகள், அதாவது ஐந்து சிறுமிகளுக்கு ஒருவர் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என்று அறிவித்துள்ளது.

இன்று உலகில், சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்ட, 65 கோடிக்கு அதிகமான பெண்கள் உள்ளனர் என்றும், 6 வயதுக்கும், 17 வயதுக்கும் உள்ளிட்ட 13 கோடிச் சிறுமிகள், பள்ளிக்கே செல்லவில்லை என்றும், 15 வயதுக்கும், 19 வயதுக்கும் உள்ளிட்ட ஏறத்தாழ 1 கோடியே 50 இலட்சம் சிறுமிகள் தங்கள் வாழ்நாளில் பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.  

2018ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, உலகில் புதிதாக எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் தாக்கப்பட்டுள்ளவர்களில் 74 விழுக்காட்டினர் 10 வயதுக்கும், 19 வயதுக்கும் உட்பட்ட சிறுமிகள் என தெரிய வந்துள்ளது. (UNICEF)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2019, 15:30