பெரு நாட்டில் அமைந்துள்ள, ‘பக்காய சமீரியா தேசியப் பாதுகாப்பு வனப் பகுதி’ பெரு நாட்டில் அமைந்துள்ள, ‘பக்காய சமீரியா தேசியப் பாதுகாப்பு வனப் பகுதி’ 

பூமியில் புதுமை – அமேசானின் ‘பக்காய சமீரியா’ காடு

பெரு நாட்டில் அமைந்துள்ள காடுகள், ‘பக்காய சமீரியா தேசியப் பாதுகாப்பு வனப் பகுதி’ என்றழைக்கப்படுகிறது. "கண்ணாடிகளின் காடு" என்று பொருள்படும் இப்பகுதி, பெரு நாட்டு அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

தென் அமெரிக்க கண்டத்தின் ஒன்பது நாடுகளில் பரவியிருக்கும் அமேசான் மழைக்காடுகளில், பெரு நாட்டில் அமைந்துள்ள காடுகள், ‘பக்காய சமீரியா (Pacaya Samiria) தேசியப் பாதுகாப்பு வனப் பகுதி’ என்றழைக்கப்படுகிறது. "கண்ணாடிகளின் காடு" என்று பொருள்படும் இப்பகுதி, பெரு நாட்டு அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பெரு நாட்டின் நிலப்பரப்பில் 1.5 விழுக்காட்டுப் பகுதியைக் கொண்டுள்ள பக்காய சமீரியா காடு, 50 இலட்சம் ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இப்பகுதியில், ஆண்டுக்கு 2000 முதல், 3000 மி.மீ. அளவுக்கு மழை பொழிகிறது. 20 முதல், 33 டிகிரி செல்சியஸ் தட்பவெட்ப நிலை ஆண்டு முழுவதும் நிலவுகிறது.

இப்பகுதியில் இரு காலநிலைகள் காணப்படுகின்றன. அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் முடிய, உயர்மட்ட நீர் காலம் என்றும், மே மாதம் முதல், செப்டம்பர் முடிய அடிமட்ட நீர் காலம் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் இக்காட்டுப் பகுதியில் ஊடுருவிச் செல்லும் ஆற்றின் தண்ணீர் மட்டம் குறைவாகக் காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு அது தகுந்த காலம் என்று சொல்லப்படுகிறது.

பக்காய சமீரியா காட்டில் 527 பறவை இனங்கள், 102 பாலூட்டி இனங்கள், 269 மீன் வகைகள் மற்றும் 1800க்கும் அதிகமான தாவர வகைகள் உள்ளதென கணிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2019, 14:52