இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் காணப்படும் காடுகள் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் காணப்படும் காடுகள் 

பூமியில் புதுமை – தனி ஒருவர் உருவாக்கிய 300 ஏக்கர் காடு

நமக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வாக, மணிப்பூரைச் சேர்ந்த 45 வயது லோயா, என்பவர், தனிமனிதராக 300 ஏக்கரில் ஒரு காட்டையே உருவாக்கி சாதனைப்படைத்துள்ளார்.

விக்டர் தாஸ் – வத்திக்கான்

புவி வெப்பமயமாதலும் பருவநிலை மாற்றமும் எதிர்கால ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த பெரும் அவநம்பிக்கையை நம்முள் ஆழ்த்தியிருக்கும் இத்தருணத்தில், அமேசான் மழைக்காடுகளில் தீப்பற்றியெரியும் தகவல் இந்த அவநம்பிக்கையை அதிகப்படுத்தும்விதமாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நமக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வாக, மணிப்பூரைச் சேர்ந்த 45 வயது லோயா,  என்பவர், தனிமனிதராக 300 ஏக்கரில் ஒரு காட்டையே உருவாக்கி சாதனைப்படைத்துள்ளார். 2002-ல் தன் சொந்த முயற்சியால் புன்ஷிலாக் என்னும் மலைப்பகுதியில் காடுகளை உருவாக்க முடிவெடுத்தார் லோயா. அதன்பயனாக, 18 வருடங்கள் கழித்து, புன்ஷிலாக் பகுதி, தற்போது, 300 ஏக்கர் நிலப்பரப்பில், செடிகொடிகள், மூலிகைகள், காட்டுவிலங்குகளுடன், அடர்வனமாகக் காட்சியளிக்கிறது. 250-க்கும் மேற்பட்ட தாவர வகைகளும், 25-க்கும் மேற்பட்ட மூங்கில் வகைகளும் இங்கு காணப்படுகின்றன. பல வகையான பறவைகள், பாம்புகள், மான்கள், எறும்புத்தின்னிகள், முள்ளம்பன்றிகள், கீரிப்பிள்ளைகள், சிறுத்தைகள் போன்ற விலங்குகளுக்கும் புன்ஷிலாக் இன்று புகலிடமாக மாறியிருக்கிறது.

"உலகை மாற்ற விரும்புகிறாயா அதை உன்னிலிருந்து துவங்கு" என்ற வாக்கிற்கிணங்க லோயா அவர்கள் சுற்றுசூழல் மாற்றத்திற்கும் இயற்கையின் பாதுகாப்பிற்கும் வித்திட்டுருப்பது நம் அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. (நன்றி: பசுமை விகடன்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2019, 12:30