அமேசான் மழைக்காடு அமேசான் மழைக்காடு 

பூமியில் புதுமை : அதிசய உலகம் அமேசான்

அமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில், 200 வகை மட்டுமே நம் பயன்பாட்டுக்கு வருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அமேசான் மழைக்காடு என்பது, தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு என்பது நாம் அறிந்ததே.

ஆண்டு முழுவதும் கொட்டும் மழை, சூரிய வெளிச்சமே பார்க்காத தரை. இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள். பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு. அதில் வசிக்கும் எண்ணற்ற அரிய வகை பறவைகள், விலங்குகள். இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர். அமேசான் காடுகளை உருவாக்கிய பெருமை, அமேசான் நதிக்கே போய்ச் சேரும். இதன் 1,100 கிளை நதிகளில், 17 கிளை நதிகள், 1,500 கிலோ மீட்டர் நீளம் கொண்டவை.

எண்ணற்ற செடிகொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள். அமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன்பாட்டுக்கு வருகிறது. ஆனால், அங்கே வாழும் மக்கள் ஏறத்தாழ 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர். இன்றளவும் இயற்கைக்கு மிக இணக்கமாக வாழ்ந்து வருவதுடன், விலங்குகளை வேட்டையாடி பச்சையாகவே உண்டு வருகின்றனர். இவர்களுக்கு சமைப்பது என்றால், என்ன என்றே தெரியாது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2019, 14:42