தேடுதல்

அமேசான் ஆறு அமேசான் ஆறு 

பூமியில் புதுமை : மர்மம் நிறைந்த அமேசான்

அமேசான் நதிக்கு அடியில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஏறத்தாழ 6 ஆயிரம் கி.மீ. நீளமுடைய மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டபோது, நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இது வாலியா ஹம்சா என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது. அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி ஏறத்தாழ 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது. ஏறத்தாழ 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, ‘ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறது. நாற்பது வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டு 2011ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், ஆய்வு பூர்த்தியாக இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றும், அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 October 2019, 15:41