தேடுதல்

இத்தாலியில் இப்புதனன்று(180919) படகு வழியாக வந்திறங்கிய 108 புலம் பெயர்ந்தோர் இத்தாலியில் இப்புதனன்று(180919) படகு வழியாக வந்திறங்கிய 108 புலம் பெயர்ந்தோர் 

புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு

பாதுகாப்பான மற்றும், ஒழுங்குமுறையான புலம்பெயர்வுகள் இடம்பெற நாடுகள், ஆவன செய்யுமாறு ஐ.நா. அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகில், வளர்ந்துவரும் மக்கள் தொகை எண்ணிக்கையைவிட, புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், தற்போது அவ்வெண்ணிக்கை 27 கோடியே 20 இலட்சம் என்றும், ஐ.நா. நிறுவனத்தின் பொருளாதார மற்றும், சமுதாய விவகார அமைப்பு (DESA), இச்செவ்வாயன்று அறிவித்துள்ளது.

2010ம் ஆண்டில் 22 கோடியே 10 இலட்சமாக இருந்த புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையின் தற்போதைய நிலை, உலக மக்கள் தொகையில் 3.5 விழுக்காடாக மாறியுள்ளது என்று, அந்த அமைப்பு கூறியுள்ளது.

தேசிய அளவில் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விவரங்களை வெளியிடுவதாகவும் அறிவித்துள்ள அந்த அமைப்பு, பாதுகாப்பான மற்றும் ஒழுங்குமுறையான புலம்பெயர்வுகள் இடம்பெற நாடுகள் ஆவன செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளது.

தற்போது ஐரோப்பாவில் 8 கோடியே 20 இலட்சம், வட அமெரிக்காவில் 5 கோடியே 90 இலட்சம், இதில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டுமே 5 கோடியே 10 இலட்சம், வட ஆப்ரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் ஏறத்தாழ 4 கோடியே 90 இலட்சம் என, புலம்பெயர்ந்தோர் உள்ளனர். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2019, 17:11