தேடுதல்

Vatican News
காடுகளை சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ள இளையோர் காடுகளை சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ள இளையோர்  (AFP or licensors)

பூமியில் புதுமை – புதுமையான பிறந்தநாள் பரிசு

அமேசான் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் திகிலூட்டும் தருணத்தில், பிரபலமான சிறுவர் இசைக்குழு பி.டி.எஸ்ஸின் இரசிகர்கள் ஒரு காட்டை உருவாக்கியுள்ளனர்

விக்டர் தாஸ் - வத்திக்கான்

பிரபலமான சிறுவர் இசைக்குழு பி.டி.எஸ், ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தென் கொரிய சிறுவர் குழுவாகும், இது சியோலில் 2013ல் உருவாக்கப்பட்டது.  இது “பாங்டன் பாய்ஸ்” என்றும் அழைக்கப்படுகிறது.

பிரபலமான சிறுவர் இசைக்குழு பி.டி.எஸ்ஸின் தலைவரான ஆர்.எம்மின் 25 வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், அவரது இரசிகர்கள் சியோலில் உள்ள ஹான் ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு பொது பூங்காவில் அவரது பெயரில் ஒரு காட்டை உருவாக்கியதாக, சுற்றுச்சூழல் இயக்கத்தின் கொரிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஆர்.எம்மின் நிலையான ஆர்வத்தை கௌரவிக்கும் விதமாக, இரசிகர்கள் பூங்காவில் 1,250 மரங்களை நட்டதோடு அல்லாமல் அதற்கு "ஆர்.எம். வன எண் 1" என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த திட்டத்திற்காக, ஆர்.எம். இரசிகர்கள் கொரிய பணம் 11,114,000 வோன்  (ஏறக்குறைய 9,140 அமெரிக்க டாலர்) நன்கொடை அளித்துள்ளனர்.  ஆர்.எம்மின் இரசிகர் ஒருவர் தன்னுடைய  “@ ஹனிஜூனி 94” என்ற டுவிட்டர் பக்கத்தில் "உள்நாட்டிலும் வெளிநாட்டிலிருந்தும் உடன் இரசிகர்களுடன் சேர்ந்து ஆர்.எம். வன எண் 1ஐ உருவாக்க முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றும், மேலும், "வருகை தரும் குடிமக்களுக்கு புதிய காற்று மற்றும் ஓய்வு இடத்தை வழங்க 2020ம் ஆண்டில் நாங்கள் ஆர்.எம். வன எண் 2 ஐ உருவாக்குவோம்," என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு நிலையான நடவடிக்கையாக உள்ளது. அமேசான் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்  திகிலூட்டும் தருணத்தில் இது மிகவும் பொருத்தமான நடவடிக்கையாகும். (நன்றி – Mashable India)

17 September 2019, 13:00