தேடுதல்

Vatican News
கொத்தமல்லி தழை கொத்தமல்லி தழை 

பூமியில் புதுமை : கீரையாகப் பயன்படும் கொத்தமல்லி செடி

கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதரின் உடலை வலுவாக்கும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்

ஆண்டிபட்டி அருகே கொத்தப்பட்டி, கதிர்நரசிங்கபுரம் கிராமங்களில் விவசாயிகள் சிலர் கொத்தமல்லி செடி சாகுபடி செய்துள்ளனர். மழை மற்றும் பனிக்காலங்களில் விதைக்கப்படும் இச்செடிகள், 40 நாளில் பலன் தரத்துவங்கி விடும். இச்சாகுபடிக்கான செலவு மிகவும் குறைவு. நிலத்தில் இயற்கை உரமிட்டு நன்கு பராமரித்து வந்தால் இச்சாகுபடியில் ஏக்கருக்கு 10 டன் வரையில் விளைச்சல் கிடைக்கும்.

கொத்தமல்லி (Coriandrum sativum) அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. சைவமாகட்டும், அசைவமாகட்டும் சமையல் மணத்தை, சுவையை தூக்கிக் கொடுக்கும் வாசனைப் பொருளில் நிரந்தரமான முதலிடத்தைப் பிடித்திருப்பது, கொத்தமல்லி என்றால் அதற்கு எதிர்க் கருத்தே இருக்காது. கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதரின் உடலை வலுவாக்கும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கின்றன.

பொதுவாக, கொத்தமல்லி அதன் இனிமையான பசி உணவைத் தூண்டக்கூடிய மணத்திற்காகவே பெரிதும் விரும்பப்படுகின்றது. கொத்தமல்லியில் இருக்கும் ஒருவிதமான எண்ணெய்ப் பசையே இந்த நறுமணத்திற்கு காரணம். கொத்தமல்லிக்கு விஷ முறிவுத் தன்மை உள்ளதால் நாம் உண்ணும் உணவினால் உடலில் படியும் எஞ்சிய நஞ்சை வெளியேற்ற துணைபுரிகின்றது. அசைவ உணவைக் கெட்டுப்போக வைக்கின்ற பாக்டீரியா நுண்ணுயிரிகளையும், பூசணங்களையும் கொல்லும் தன்மை கொத்தமல்லிக்கு உண்டு.

வயிற்றுப் பொருமல், வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்ற வயிற்று உபாதைகளுக்கு கொத்தமல்லி நல் லதீர்வு. சுக்கு கொத்தமல்லி விதைகளும், சேர்த்து உண்டாக்கப்படும் சுக்குமல்லி காப்பி வழக்கமான தேயிலை, காப்பி பானங்களுக்கு ஆரோக்கியமான மாற்று. கருப்பட்டி சேர்த்து உண்டாக்கப்படும் சுக்கு மல்லி காப்பிக்கும் நிகரான கிராமத்து பானம் உண்டா? (நன்றி - vivasayam.org)

27 September 2019, 14:28