மேரி தெரேசா - வத்திக்கான்
சிவகாசியைச் சேர்ந்த திருவாளர் மாறன் G அவர்கள், தாய்வழி இயற்கை உணவகத்தின் உரிமையாளர். இயற்கை வாழ்வியல் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக, இயற்கை உணவு வாழ்வியலை ஊக்குவித்து வருபவர். நோயற்ற ஆனந்த வாழ்வியல் பற்றியும், முளைகட்டிய இயற்கை உணவின் நன்மைகள் பற்றியும், சிவகாசி மாறன் G அவர்கள் தொலைபேசி வழியாகப் பகிர்ந்து கொண்டதை ஏற்கனவே ஒலிபரப்பினோம். அதைத் தொடர்ந்து, அவர் நடத்துகின்ற தாய்வழி இயற்கை உணவகம் பற்றிக் கூறியதை இன்று உங்களுக்காக..