தேடுதல்

Vatican News
வெனெசுவேலா சிறாருடன் UNICEF வெனெசுவேலா சிறாருடன் UNICEF  (© Notice: UNICEF photographs are copyrighted and may not be reproduced in any medium without written permission from authorized)

வெனெசுவேலாவில் 32 இலட்சம் சிறார்க்கு மனிதாபிமான உதவிகள்

வெனெசுவேலாவில், 13 இலட்சம் சிறார் மற்றும், வளர்இளம் பருவத்தினருக்கு பாதுகாப்பு வசதிகள் தேவை - யுனிசெப்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

வெனெசுவேலா நாட்டின் நிலைமை தொடர்ந்து மோசமாகிக்கொண்டுவரும்வேளை, அந்நாட்டில், ஏறத்தாழ 32 இலட்சம் சிறார்க்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று, ஐ.நா.வின், குழந்தைநல நிதி அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது.

உணவுப் பற்றாக்குறை, இன்னும், மருத்துவ உதவி, சுத்தமான குடிநீர், மற்றும், கல்வி பெற போதிய வசதிகளின்றி துன்புறும் சிறாருக்கும், குடும்பங்களுக்கும் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கும் யுனிசெப் அமைப்பு, நாடெங்கும், குறைந்தது 43 இலட்சம் மக்களுக்கு, பாதுகாப்பான குடிநீர் கிடையாது என்று கூறியுள்ளது.

தட்டம்மை, தொண்டை அழற்சி உட்பட, தடுப்பூசிகளால் தடுத்து நிறுத்தவல்ல நோய்களும், மஞ்சள் காய்ச்சலும், மலேரியாவும் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளன என்று கூறும் யுனிசெப், பத்து இலட்சத்திற்கு அதிகமான சிறார் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டனர் என்றும் கூறியுள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனெசுவேலா முழுவதும், இந்த ஆண்டில் 9 இலட்சம் சிறார்க்குச் 7 கோடி டாலருக்கு அதிகமான பணம் தேவை என்றும், ஐ,.நா. குழந்தை நல அமைப்பு கூறியுள்ளது. (UN)

21 August 2019, 15:49