தண்ணீர் பஞ்சத்தைச் சித்தரிக்கும் படம் தண்ணீர் பஞ்சத்தைச் சித்தரிக்கும் படம் 

பூமியில் புதுமை : நிலத்தடி நீர் குறைவால் வரும் பிரச்சனைகள்

நிலத்தடி நீர் மறைந்தால் விவசாயம் குறைந்துபோகும், தொழில்கள் நசியும், குடியிருப்புக்களை காலி செய்யும் நிலை உருவாகும், சுற்றுச் சூழல் மாசுபடும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நிலத்தடி நீர் குறைவதினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து கொஞ்சம் நோக்குவோம்.

முதலில், விவசாயம் நலிவுறும். கிணற்றுப்பாசனத்தையே நம்பியுள்ள விவசாயம் குறைந்துபோகும். இரண்டாவது, நீர்த்தேவை அதிகமாக உள்ள தொழில்கள் நசியும். திருப்பூர் போன்ற நகரங்கள் நிலத்தடி நீரை வெகுவாக நம்பியிருக்கின்றன. பின்னலாடைத்தொழில் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். மூன்றாவதாக, கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் குடியிருக்கும் மக்கள் தங்கள் குடிநீர்த் தேவைக்கு நிலத்தடி நீரையே நம்பியிருப்பதால், அது கிடைக்காதபோது, குடிபெயரும் நிலைக்குத் தள்ளப்படுவர். குடிநீர் என்றால் குடிப்பதற்கு மட்டும் என்று அர்த்தம் இல்லை. வீட்டிற்கு வேண்டிய அனைத்துப் பயன்களுக்குமான நீர் என்றுதான் அர்த்தம். நிலத்தடி நீர் குறையும்பட்சத்தில், குடியிருப்புக்களையே காலி செய்யவேண்டிய நிலை உருவாகக்கூடும். நான்காவதாக, நீர் இல்லையேல்    சுற்றுச்சூழல் மாசடையும். சரியான விவசாயமும், தொழிலும், மக்கள் நடவடிக்கைகளும் இருந்தால்தான் ஒரு பகுதி சுத்தமாக இருக்கும். இல்லாவிடில் அந்தப் பகுதி தரிசாகப்போய் பாழடைந்து சுற்றுச்சூழல் மாசுபட வழியாகும். இன்னும் பிரச்சனைகளின் பட்டியல் அதிகமாகவே உள்ளன. அத்தகைய நிலைகளுக்கு நாம் தள்ளப்பட வேண்டுமா என்பது குறித்து சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2019, 15:55