நேபாள காற்று மாசுக்கேடு நேபாள காற்று மாசுக்கேடு 

பூமியில் புதுமை – 'மாசுக்கேடும், காலநிலை மாற்றமும்'

தாவரங்கள், விலங்குகளின் உணவாகின்றன. விலங்குகளின் கழிவுகள், மீண்டும் தாவர உலகிற்குப் பயனளிக்கிறது. ஆனால், தொழிற்சாலைகள் உருவாக்கும் பொருள்கள், வெறும் கழிவாக, இவ்வுலகை நிறைக்கின்றன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

சுற்றுச்சூழலையும், நம் உலகையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய, 'இறைவா உமக்கே புகழ்' (Laudato Si' - On Care for Our Common Home) என்ற திருமடலின் முதல் பிரிவில், நம் பொதுவான இல்லத்திற்கு நிகழ்வதென்ன (What is Happening to our Common Home) என்ற கேள்வியை எழுப்பி, ஒரு சில விளக்கங்களை வழங்கியுள்ளார். இப்பிரிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'மாசுக்கேடும், காலநிலை மாற்றமும்' என்ற தலைப்பில் பகிர்ந்துள்ள கருத்துக்களில் ஒரு சில இதோ:

காற்றோடு கலந்துவிட்ட மாசுக்களால், உடல்நலக் குறைவடைந்து துன்புறுவது, பெருமளவில் வறியோரே. இவர்களில் பலர், குழந்தைகளாக, சிறார்களாக இறக்கின்றனர். போக்குவரத்து, ஆலைகள் ஆகியவற்றால் உருவாகும் மாசுகள், நீரையும், காற்றையும் சீரழிக்கின்றன. வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் உரங்கள், நிலத்தைப் பாழாக்குகின்றன. பயன்படுத்தி தூக்கியெறியும் பொருள்களும் மாசுக்கேட்டை உருவாக்குகின்றன. நமது இல்லமாகிய இப்பூமி, குப்பை மலையாக மாறிவருகிறது.

இயற்கைச் சுழற்சியில், தாவரங்கள், விலங்குகளின் உணவாகின்றன. அவற்றை உண்ணும் விலங்குகள், வெளியேற்றும் இயற்கைக் கழிவுகள், மீண்டும் தாவர உலகிற்குப் பயனளிக்கிறது. இவ்வாறு இயற்கை தன் சுழற்சியைத் தொடர்கிறது. ஆனால், தொழிற்சாலைகள் உருவாக்கும் பொருள்கள், மறுசுழற்சி செய்யப்படுவதற்குப் பயனற்று போவதால், அவை வெறும் கழிவாக, குப்பையாக இவ்வுலகை நிறைத்து வருகின்றன. (இறைவா உமக்கேப் புகழ் - 17-22)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2019, 10:43