இந்தோனேசியாவில் வறட்சி இந்தோனேசியாவில் வறட்சி 

பூமியில் புதுமை : நிலத்தடி நீர்வளம் அருகி வருகிறது

‘தமிழகம் மெதுவாக பாலைவனமாக மாறும் நிலை உருவாகும்’ என்ற கூற்றைப் பொய்யாக்க வேண்டுமெனில், பொறுப்புணர்வுக்கு முதலிடம் தர வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்

நிலத்தடி நீர்த்தாங்கிகளுக்குச் சென்றடையும் நீரைவிட அதிகப்படியான நீரை, நாம் வெளியே எடுக்கிறோம். பலவேளைகளில், பயிர்களின் தேவைக்கு அதிகமாக தண்ணீரைப் பாய்ச்சுகிறோம். ஏரி, குளங்கள், நீர்த்தேக்கங்களில் தூர்வார மறக்கிறோம். அத்தோடு அவைகளை ஆக்கிரமிப்பும் செய்கிறோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பெருகிவரும் மக்கள்தொகையும்  தொழிற்சாலைகளும் நீரின் தேவையை அதிகரித்துள்ளன. இப்படியே தொடருமானால் தமிழகம் மெதுவாக பாலைவனமாக மாறும் நிலை உருவாகும். இவைகளை மாற்றியமைத்து, வருங்காலத் தலைமுறைக்கு உதவ வேண்டுமானால், அறிவியல் ரீதியாக வேளாண்மை செய்து நீரின் தேவையைக் குறைக்கவேண்டும். பாசனத்திறனை அதிகரிக்கவேண்டும். தேவையான இடங்களில் மட்டுமே கிணறுகள் தோண்டப்படவேண்டும். ஏரி, குளங்களில் படிந்துள்ள வண்டலை முழுமையாக அகற்றி, அவற்றை பழைய கொள்ளளவுக்குக் கொண்டுவரவேண்டும். கடலுக்கு அருகாமையில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்தி, உப்பு நீர் ஊடுருவலைத் தடுக்கவேண்டும். தொழிற்சாலைகள் நல்ல நீரைப் பயன்படுத்தாமல் கழிவு நீரைச் சுத்தம் செய்து பயன்படுத்த முன்வர வேண்டும். ஏரி, குளம், கால்வாய், ஆறுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றைப் பாதுகாக்கவேண்டும். வீடுகளில், மழை நீர் சேமிப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் நம் பொறுப்புணர்வே அடிப்படை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2019, 15:43