வயல்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்து வயல்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்து 

பூமியில் புதுமை : நல்லவைகளையும் அழிக்கிறது பூச்சிக்கொல்லி

நிலத்தடி நீர், நன்மை செய்யும் சிற்றுயிரினங்கள், சிற்றுயிரினங்களை உட்கொள்ளும் பறவை இனங்கள், ஏன், மனிதர்களையும் அழித்துவரும் வேதியியல் பூச்சிக்கொல்லி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்

இந்தியாவில் பூச்சிக்கொல்லி மருந்து தொழிலில் மட்டும் ஆண்டுக்கு ரூ. 5,000 கோடி புழங்குகிறது. ஓர் ஆண்டுக்கு 60,000 டன் நச்சுப் பொருள் பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பயிர் விளைச்சலை பாதுகாக்கவும், திடக்கழிவுகளை அழிப்பதற்காகவும் நிலப்பரப்பின் மீது தெளிக்கப் படுகின்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் நிலத்தடிநீரைச் சென்றடைகின்றன. இதனால் நிலத்தடி நீரில் மாசு ஏற்பட்டு, அதைப் பயன்படுத்தும் நமக்கும் தீங்கு ஏற்படுகின்றது. மழைக்காலங்களில், நீரில் கரைந்து, நீர் நிலைகளை அடைந்து, அங்குள்ள சிற்றுயிரினங்களையும் அழிக்கின்றன. நச்சு கலந்த சிற்றுயிரினங்களை உட்கொள்வதால், பறவை இனங்களும் அழிந்துவிடுகின்றன. இதனால் நாம் எளிதில் காணக்கூடிய சிட்டுக்குருவி, மைனா, மணிப்புறா, செம்பருந்து போன்ற பறவை இனங்களைக் காண்பதும் அரிதாகிவிட்டது எனக் கூறுகின்றனர் வல்லுனர்கள். நன்மைசெய்யும் பூச்சிகளும் அழிந்து வருகின்றன. மகரந்தச்சேர்க்கையில், மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நஞ்சுகளால் தேனீக்களும் பாதிக்கப்படுகினறன.

இந்தியாவில் பூச்சிக்கொல்லி மருந்துகளால் வருடத்துக்கு 10,000 மனிதர்கள் இறப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்திருக்கிறது, உண்மை கண்டறியும் குழு. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2019, 15:51