தேடுதல்

Vatican News
ஏமனில் குழந்தைகளுக்கு நல ஆதரவுப் பணிகள் ஏமனில் குழந்தைகளுக்கு நல ஆதரவுப் பணிகள் 

ஏமனில் காலரா நோய்க்குப் பலியாகும் குழந்தைகள்

மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில், இவ்வாண்டில் மட்டும், இதுவரை, 190க்கும் அதிகமான குழந்தைகள், காலரா நோய்க்குப் பலியாகியுள்ளனர் - Save the Children

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மோதல்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில், இவ்வாண்டில் மட்டும், இதுவரை, 190க்கும் அதிகமான குழந்தைகள், காலரா நோய்க்குப் பலியாகியிருப்பதாக Save the Children என்ற குழந்தைகள் நல அமைப்பு கூறியுள்ளது.

90 இலட்சத்திற்கும் அதிகமானோர், குடிநீர் இன்றி தவிக்கும் ஏமன் நாட்டில், காலரா நோய் பரவுவதற்கு, அண்மையில் அங்கு பெய்த மழையும் ஒரு காரணமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது, Save the Children அமைப்பு.

இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில், 4 இலட்சத்து 40,000 பேர் காலரா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்ட நிலையில், அதில், 2 இலட்சத்து 3,000 பேர் 15 வயதிற்குட்பட்ட சிறார் என்றும் எடுத்துரைக்கிறது, Save the Children அமைப்பு.

ஏமன் நாட்டில், இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் நிகழ்ந்த காலரா தொடர்புடைய மரணங்களை ஒப்பிடுகையில், இது கடந்த ஆண்டின் முதல் ஆறுமாதக் கால காலரா தொடர்புடைய இறப்புக்களை விட, 9 மடங்கு அதிகம் என்று கூறுகிறது. Save the Children அமைப்பு.

08 July 2019, 15:48