வெனிசுவேலாவில் குழந்தைகளுக்கு  உதவும் யுனிசெஃப் வெனிசுவேலாவில் குழந்தைகளுக்கு உதவும் யுனிசெஃப் 

வெனிசுவேலாவில் 32 இலட்சம் குழந்தைகளுக்கு உதவிகள் தேவை

தடுக்கவல்ல நோய்களிலிருந்து குழந்தைகளை காப்பாற்றவேண்டியது உலக சமுதாயத்தின் நன்னெறி சார்ந்த கடமை என்கிறது யுனிசெஃப்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

வெனிசுவேலாவில் 31 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கும் பணியைத் துவக்கியுள்ளது, யுனிசெஃப் அமைப்பு.

5 வயதிற்குட்பட்ட 31 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ எனும் இளம்பிள்ளை வாதத்திற்கு எதிரான தடுப்பு மருந்துக்களை வழங்கும் பணியை வெனிசுவேலா நல அமைச்சகம், மற்றும், அமெரிக்க கண்டத்தின் நல அமைப்பின் ஒத்துழைப்புடன் துவக்கியுள்ள யுனிசெஃப் எனும் குழந்தைகள் நல நிதி அமைப்பு, நாடு முழுவதும் ஏழாயிரம் தடுப்பு மருந்து மையங்கள் வழியாக இதனை நிறைவேற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடிகளையும், மருந்துகள் தட்டுப்பாட்டையும் சந்தித்துவரும் வெனிசுவேலா நாட்டில், குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்துக்களை வழங்கும் யுனிசெஃப் அமைப்பு, தடுக்கவல்ல நோய்களிலிருந்து குழந்தைகளை காப்பாற்றவேண்டியது, உலக சமுதாயத்தின் நன்னெறி சார்ந்த கடமை என அறிவித்துள்ளது.

ஐ.நா.வின் கணிப்புப்படி, வெனிசுவேலா நாட்டில், ஏறத்தாழ 32 இலட்சம் குழந்தைகளுக்கு, பல்வேறு விதமான உதவிகள் தேவைப்படுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2019, 16:29