தேடுதல்

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா.விடம் விண்ணப்பம் போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா.விடம் விண்ணப்பம்  

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் குறித்து ஐ.நா.

பிலிப்பைன்சில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரிக்குமாறு, Michelle Bachelet அவர்கள் ஆணைப் பிறப்பித்துள்ளார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பிலிப்பைன்ஸ் அரசுத்தலைவர் ரொட்ரிக்கோ துத்தர்தே அவர்கள் தொடங்கியுள்ள போதைப்பொருளுக்கு எதிரான வன்முறை நடவடிக்கையில் இடம்பெறும் கொலைகள் உட்பட, அந்நாட்டில் கொலைகள் அதிகரித்துவருவது குறித்து, ஐ.நா.வின் மனித உரிமைகள் அவை, விரிவான விசாரணையைத் தொடங்கும் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஐ.நா.வின் மனித உரிமைகள் அவையில், ஐஸ்லாந்து நாடு பரிந்துரைத்த இந்த விசாரணைக்கு ஆதரவாக, பல நாடுகள் இவ்வெள்ளியன்று வாக்களித்துள்ளன.

அரசுத்தலைவர் துத்தர்தே அவர்களின் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையில், இதுவரை 6,600க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்றும், கடந்த ஆறு மாதங்களில் மட்டும், 1,600 பேர் பலியாகியுள்ளனர் என்றும், பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அதேவேளை, 27 ஆயிரத்திலிருந்து, முப்பதாயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என, ஊடகங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.

இதற்கிடையே, ஐ.நா. மனித உரிமைகள் அவை இயக்குனர் Michelle Bachelet அவர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரிக்குமாறு ஆணைப் பிறப்பித்துள்ளார் எனவும், இந்த அறிக்கை 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.  (AsiaNews / Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2019, 16:38