தேடுதல்

Vatican News
நீர் மாசுக் கேட்டால் செத்து மிதக்கும் மீன்கள் நீர் மாசுக் கேட்டால் செத்து மிதக்கும் மீன்கள்  (AFP or licensors)

பூமியில் புதுமை : விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி

காடுகள் அழிவு, நீர் நிலைகள் பராமரிக்கப்படாமை, மணற்கொள்ளை, நீர் நிலைகளில் ஆக்கரமிப்பு, பெரிய தொழிற்சாலை கழிவுகள் ஆகியவை, வறட்சிக்கான முக்கிய காரணங்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்

தண்ணீர் வறட்சிக்கு முக்கிய காரணங்களாக, மரங்கள், காடுகள் அழிக்கப்படுதல், நீர் நிலைகள் சரியாக பராமரிக்கப்படாமை, ஆறுகளில் மணற்கொள்ளை, நீர் நிலைகளில் ஆக்கரமிப்பு, கடல் அருகாமையில் உள்ள இடங்களில், நிலத்தடி நீர் குறைய குறைய அதனை கடல் நீர் ஆக்கரமித்தல், பெரிய தொழிற்சாலை கழிவுகள் தகுந்த முறையில் வெளியேற்றப்படாமல் நல்ல நீரில் தொடர்ந்து கலந்துக் கொண்டே இருத்தல், போன்றவற்றைக் குறிப்பிடுகின்றனர். இத்தகையக் காரணங்களால் முதலில் பாதிக்கப்படுவது, விவசாயமே. மேலும், பயன்பாட்டு நீர் பற்றாக்குறையால், பலவிதமான நோய்கள் மனிதனை தாக்க ஆரம்பிக்கின்றன என்கின்றனர், வல்லுனர்கள். உலக அளவில் நோய்க் கிருமி பாதிப்புகளினால் மக்கள் அவதிப்படுவதில் 80 விழுக்காட்டிற்கு, நீர் பற்றாக்குறையே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீரின் அளவை உயர்த்த வேண்டுமெனில், மழை நீர் சேகரிப்பு மிகவும் அவசியமாகிறது. ஏரி, குளம், கிணறு போன்றவற்றை பாதுகாத்து, மழைக்காலங்களில் நீர் தேக்கங்களில் தூர்வாரி, நீரை சேமித்து வைக்க ஆவன செய்ய வேண்டியுள்ளது. மேலும், சின்ன மற்றும் பெரிய அளவிலான நீர் தேக்கங்களை தேவைப்படும் இடங்களில் உருவாக்கவும் வேண்டியுள்ளது.

மரம் நடுதலும் மழை நீர் சேகரிப்பும் இன்று அத்தியாவசியமானவை, அவசரமானவையும் கூட.

19 July 2019, 12:51