தேடுதல்

நாற்று நடும் இந்திய விவசாய சமுதாயம் நாற்று நடும் இந்திய விவசாய சமுதாயம் 

பூமியில் புதுமை : பத்தாண்டுகளில் 1,82,936 விவசாயிகள் தற்கொலை

வளமான மண் இன்று வளம் குன்றிப் போனதற்கு காரணம், விவசாயத்தில் வேதியியல் பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்தியதேயாகும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்

“பலகுடை நீழலும்தம் குடைக்கீழ்க் காண்பார்

அலகுடை நீழலவர்”

அரசாளும் மன்னர்களே ஆனாலும் உலகுக்கு உணவு படைக்கும் விவசாயியின் குடையின் கீழ்தான் இருப்பர் என்றார் வள்ளுவர்.

அப்படி உயர்வான புகழ் பெற்ற உழவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கெல்லாம் காரணம், விவசாயத்தை பற்றிய சரியான புரிதல் இல்லாமையும், வேதியியல் பொருள்களை நம்பியதாலும்தான்.

தேசிய குற்ற ஆவண அமைப்பின் கணக்கெடுப்பின்படி, 1997லிருந்து 2007ம் ஆண்டு வரை தற்கொலை செய்து கொண்ட இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 1 இலட்சத்து 82 ஆயிரத்து 936 ஆகும்.

இந்திய மண் வளத்தை ஆராய்ந்த பன்னாட்டு ஆய்வுக்குழு, நம் மண்ணில் இரும்பு, மாலிப்டினத்தை தவிர, பிற சத்துக்களான பாஸ்பரஸ், மக்னீஷியம், போரான், துத்தநாகம் போன்றவை குறைவாக உள்ளதாக கூறுகின்றது.

வளமான மண் இன்று வளம் குன்றி களங்கமானதற்கு விவசாயத்தில் வேதியியல் பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்தியதே காரணம்.

காலம் கடந்துவிடவில்லை, மாற்றிக்கொள்ள இன்னும் நேரமும், வாய்ப்பும் உள்ளன. கடந்ததை நினைத்து வருந்தாமல், நாம் செய்த தவற்றை திருத்த இதுவே உகந்த நேரம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2019, 14:59