தேடுதல்

Vatican News
விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் 

நேர்காணல் – ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டங்கள்

திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி, அனைத்திந்திய இளையோர் பெருமன்றம் சார்பில், திருவாரூரில் நூற்றுக்கும் மேற்பட்ட இளையோர், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, பத்தாயிரம் தபால்களை அனுப்பியுள்ளனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்துக்கு எதிராக, திருவாரூரில் போராட்டம் நடத்திய 770 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என, ஜூலை 25, இவ்வியாழனன்று செய்திகள் வெளியாயின. இந்நிலையில், மனித உரிமை ஆர்வலர் எக்ஸ்.டி.செல்வராஜ் அவர்கள் வாட்சப்வழி பகிர்ந்துகொண்டவை

நேர்காணல்–ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டங்கள்-XD செல்வராஜ்
25 July 2019, 14:37