கொலைக் குற்றங்கள் குறித்து, UNODC அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கொலைக் குற்றங்கள் குறித்து, UNODC அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை 

போரைவிட, கொலைகளால் இறப்போர், 5 மடங்கு அதிகம்

மத்திய அமெரிக்க நாடுகளில் மிக அதிக அளவில் கொலைகள் நிகழ்கின்றன; ஆசியா, ஐரோப்பா, மற்றும் ஓசியானியா பகுதிகளில் கொலைக்குற்றங்களால் இறப்போரின் எண்ணிக்கை குறைந்த அளவில் உள்ளது – UNODC அறிக்கை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

போதைப்பொருள் மற்றும் குற்றம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் ஐ.நா.அவையின் UNODC அலுவலகம் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, உலகில், போர் மற்றும் மோதல்களால் இறப்போரின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஒவ்வொருநாளும் கொலை செய்யப்படுவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

UNODC அலுவலகம், ஜூலை 8, இத்திங்களன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், 2017ம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, உலகில் போர் மற்றும் மோதல்களால் இறந்தோரின் எண்ணிக்கை, 89,000 என்றும், கொலைக் குற்றங்களால் இறந்தோரின் எண்ணிக்கை 4,64,000 என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகில், மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த நாடுகளில் மிக அதிக அளவில் கொலைகள் நிகழ்கின்றன என்று கூறும் இவ்வறிக்கை, ஆசியா, ஐரோப்பா, மற்றும் ஓசியானியா பகுதிகளில் கொலைக்குற்றங்களால் இறப்போரின் எண்ணிக்கை குறைந்த அளவில் உள்ளது என்று கூறுகிறது.

கொலை குற்றங்களுக்கு உள்ளாகும் மனிதர்களில், 15 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது என்றும், அதற்கு அடுத்தபடியாக, ஒன்பது வயதுக்குட்பட்ட சிறாரின் எண்ணிக்கை உள்ளது என்றும் UNODC அலுவலகத்தின் அறிக்கை கூறுகிறது.

கொலைக் குற்றங்களின் பெரும் எண்ணிக்கை, குடும்பங்களில், மிக நெருங்கியவர்களுக்கிடையே நிகழ்வது அதிர்ச்சி தருகிறது என்று ஐ.நா.வின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2019, 15:12